60th Wedding: அறுபதாம் கல்யாணத்தின் பாரம்பரியமும், பலன்களும்…

ஏற்கனவே தம்பதிகளாய் இருப்பவர்களுக்கு ஏன் மீண்டும் திருமணம் செய்யப்படுகிறது? அறுபதாம் கல்யாணம் பற்றிய விவரங்களை விவரமாக தெரிந்துக் கொள்வோம்..

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 28, 2021, 01:16 AM IST
  • அறுபதாம் கல்யாணத்தின் பாரம்பரியம்
  • இரு மனம் சேர்ந்த தம்பதிகளுக்கு மீண்டும் மணம் ஏன்?
  • மனமொத்த தம்பதிகளுக்கு மீண்டும் மணவிழா கொண்டாடும் காரணம்
60th Wedding: அறுபதாம் கல்யாணத்தின் பாரம்பரியமும், பலன்களும்… title=

திருமணம் என்பது இரு மனங்களின் சேர்க்கை என்றால், மணமான தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்து கொள்வது ஏன்? ஏற்கனவே திருமணமாகி, தம்பதியாக பல்லாண்டுகள் வாழ்ந்த பிறகு திருமணம் செய்து கொள்வது ஏன்? இதன் தாத்பர்யம் தெரியுமா?

தம்பதிகளில் கணவருக்கு அறுபது வயது நிறைவடைந்ததும் மீண்டும், தனது மனைவிக்கு தாலி கட்டி திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கம் பலரிடையே உண்டு. அறுபதாம் கல்யாணம் என்பதை, சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் அழைக்கின்றனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து புதிய வாழ்க்கையை, வாழ்க்கைத்துணையை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். தங்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோருக்கு பிள்ளைகள் சேர்ந்து திருமணம் செய்து வைக்கும் பழக்கமே சஷ்டியப்த பூர்த்தி ஆகும்.

Read Also | திருப்பதி திருமலையில் நடந்த முதல் திருமணம்
 
தமிழ் வருடங்கள் 60. ஒருவர் தான் பிறந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 61வது வருடத்தில் நுழையும்போது, அவர் பிறந்த நாள், கிழமை, கிரகங்கள் என ஒரு சுழற்சி முடிந்து மற்றொரு சுற்று தொடங்குகிறது. எனவே, ஒரு சுற்று அதாவது அறுபது ஆண்டுகள் கடந்ததை குறிக்கும் வகையில் மணிவிழா கொண்டாடப்படுகிறது.
 
சஷ்டியப்த பூர்த்தி சடங்கை ஆலயம்,, திருமண மண்டபம், வீடு என எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். பெற்றவர்களுக்கு திருமணம் செய்து பார்க்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்துவிடாது. பொதுவாக, பெற்றோரின் அறுபதாம் திருமணத்திற்கான செலவுகளை பிள்ளைகளே செய்வார்கள். பிள்ளைகளே, தங்கள் பெற்றோரின் திருமணத்திற்கு அழைப்பது வழக்கம்.. 

திருமணத்தின்போது முதலில் குலதெய்வ பூஜை செய்த பின்பு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுள் விருத்தி ஹோமம், அமிர்த ம்ருத்யுஞ்ஜய ஹோமம், தன்வந்திரி ஹோமம் என ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும்.

Also Read | திருமணத்தில் கலந்துக் கொள்ள விருந்தினர்களை வாடகைக்கு எடுக்கும் விசித்திர நாடு!

பிறகு 60 வயது பூர்த்தியான கணவன், தனது மனைவிக்கு புதுத் தாலி கட்டும் சடங்கு நடத்தப்படும்.  பூஜை முடிந்ததும், கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை, மணமக்களின் பிள்ளைகள், உற்றார்-உறவினர்கள், மணமக்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். அறுபதாம் கல்யாணம் செய்துக் கொண்ட மணமக்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது. 

மணமக்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், ஆலயத்தில் இறைவனை தரிசிக்க வருவோர் அனைவருமே மணமக்களின் மீது கலச நீரை ஊற்றி, ஆசீர்வாதம் பெறுவது வழக்கம்.  

ஹோமங்களின் பலன்களால் தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலமும் ஏற்படும் என்பது ஐதீகம்.

Read Also | கடவுள் தங்கத்தை உருக்காதே தமிழக அரசே! கையெழுத்து வேட்டை தீவிரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News