உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.. தொப்பை குறைய இந்த வீட்டு வைத்தியம் மட்டும் போதும்

Drinks for weight loss: உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்களுக்காக இந்த ஸ்பெஷல் பானம் பலன் தரும். எனவே தாமதிக்காமல், ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்கும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 24, 2023, 12:11 PM IST
  • காலையில் எழுந்தவுடன் முதலில் தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.
  • எடை இழப்பு முயற்சிக்கு பெருஞ்சீரக தண்ணீர் ஒரு அற்புதமான தீர்வாகும்.
உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.. தொப்பை குறைய இந்த வீட்டு வைத்தியம் மட்டும் போதும் title=

உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்கள்: தற்போது உடல் பருமன் (Weight Loss Tips) என்பது பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. உடலில் கொழுப்பு சேர்ந்தவுடன், அதைக் குறைப்பது பெரிய சவாலாகிவிடும். இதற்கு நீங்கள் ஒரு கடுமையான டயட் முறையை பின்பற்ற வேண்டும், அப்போதுதான் கொழுப்பு உருகத் தொடங்கும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் கடினமான வேலை. இதை குறைக்க, யோகா முதல் ஜிம் வரை பல உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இந்நிலையில் அதிகரித்து வரும் தொப்பையை குறைக்க, 1 மாதத்தில் குறைக்க ஒரு செய்முறையை நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த சிறப்பு பானம் குறிப்பாக உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காதவர்களுக்கு கட்டாயம் உதவியாக இருக்கும். எனவே எந்த தாமதமும் இன்றி அந்த ஆரோக்கியமான எடை குறைக்கும் பானம் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

உடல் எடையை குறைக்க உதவும் பானத்தை  தயாரிப்பது எப்படி  | How to make a weight loss drink

தேவையான பொருட்கள்: இந்த பானத்தை (Weight Loss Drinks) தயாரிக்க, உங்களுக்கு 100 கிராம் ஓமம், 100 கிராம் கருப்பு சீரகம், 250 கிராம் வெந்தயம், 02 தேக்கரண்டி பெருங்காயம் மற்றும் 03 தேக்கரண்டி உலர் இஞ்சி தூள் / சுக்கு தேவை.

செயல்முறை: முதலில் ஒரு கடாயில் வெந்தயத்தை வறுக்கவும், பின்னர் கருப்பு சீரகம் மற்றும் ஓமத்தை வறுக்கவும். இதற்குப் பிறகு, வெந்தயம், ஓமம், உலர்ந்த இஞ்சித் தூள் மற்றும் பெருங்காயத்தை மிக்ஸி கிரைண்டரில் நன்கு அரைக்கவும். பொடி போல் ஆனதும், ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் இரவு தூங்கும் முன் குடிக்கவும்.

மேலும் படிக்க | கல்லீரல் முதல் நுரையீரல் வரை... வியக்க வைக்கும் வெல்லத்தின் மருத்துவ குணங்கள்!

உடல் எடை குறைக்க இந்த பானங்களையும் குடிக்கலாம்:

தேன், எலுமிச்சை தண்ணீர்: காலையில் எழுந்தவுடன் முதலில் தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது எடை இழப்பிற்காக பல ஆண்டுகளாக எண்ணற்றவர்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பயனுள்ள டிப்ஸ் ஆகும். 

சீரக தண்ணீர்: உங்களது எடை இழப்புக்கு இரவு தூங்க செல்லும் முன் 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் இந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். நல்ல பலனை காண்பீர்கள்.

கிரீன் டீ: நீங்கள் உடல் எடை இழப்பு பயணத்தில் குறிப்பாக தொப்பையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், புதினா இலைகளுடன் சூடான 1 கப் கிரீன் டீ-யுடன் காலை உங்கள் நாளை தொடங்கலாம்.

பெருஞ்சீரக தண்ணீர்: எடை இழப்பு முயற்சிக்கு பெருஞ்சீரக தண்ணீர் ஒரு அற்புதமான தீர்வாகும். இதனை தொடர்ந்து குடிப்பதால் உடலில் கொழுப்பு சேரும் அளவு கணிசமாக குறைகிறது. 

ஆப்பிள் சிடர் வினிகர்: காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். தினமும் காலையில் இந்த பானத்தை முதலில் குடித்து வாருங்கள்.

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குறைவாக சாப்பிடணும்... வயிறு நிறைவாகவும் இருக்கணுமா... ‘இந்த’ டிப்ஸ் உதவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News