டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதாரை கண்டிப்பாக இணைக்க வேண்டுமா?

போலி டிரைவிங் லைசென்ஸ் மூலம் நடைபெறும் மோசடி பிரச்சனைக்கு தீர்வு காண டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 5, 2022, 06:46 AM IST
  • டிரைவிங் லைசென்சில் பல மோசடிகள் நடைபெறுகிறது.
  • போலி டிரைவிங் லைசென்ஸ் அதிகமாக வந்துவிட்டது.
  • இதனால் விபத்துகளும் அதிகளவில் நடைபெறுகிறது.
டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதாரை கண்டிப்பாக இணைக்க வேண்டுமா?  title=

பல மோசடிகளை தடுக்கும் பொருட்டு ஆதார் கார்டுடன் நமது முக்கிய ஆவணங்களை இணைக்கும் செயல்முறை நடைபெற்று வருகிறது, அந்த வகையில் அதிகரித்து வரும் போலி டிரைவிங் லைசென்ஸ் பிரச்சனை காரணமாக தற்போது டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு செய்வதன் மூலம் போலி டிரைவிங் லைசென்ஸ் மூலம் நடைபெறும் மோசடி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கருதப்படுகிறது.  இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணமாகும். இதன் மூலம் அரசின் பல திட்டங்களை எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலகட்டம் என்பதால் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியமான செயல்முறைகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது, 

மேலும் படிக்க | 5ஜி பயன்படுத்த புதிய சிம் வாங்க வேண்டுமா?

தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து தளர்வுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் டிரைவிங் லைசென்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.  அதனால் இப்போது மக்கள் அவர்களது டிரைவிங் லைசென்ஸுடன் ஆதார் கார்டை இணைத்துக்கொள்ளலாம்.  டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைக்க நீங்கள் வெளியில் எங்கும் அலையவேண்டிய தேவையில்லை, நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைக்கலாம்.  இதனை செய்ய முதலில் உங்கள் மாநில போக்குவரத்துத் துறையின் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.  இந்த பக்கத்திற்கு சென்றவுடன் 'லிங்க் ஆதார்' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, திரையில் கீழே தோன்றும் பகுதியில் 'டிரைவிங் லைசென்ஸ்' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.  

இதனை செய்த பிறகு டிரைவிங் லைசென்ஸ் எண்ணை உள்ளிட வேண்டும், அடுத்து 'கெட் டீட்டெயில்ஸ்' என்பதை க்ளிக் செய்த பின் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.  அதனைத்தொடர்ந்து  'சப்மிட் ' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஓடிபி அனுப்பிவைக்கப்படும்.  மொபைலுக்கு வந்த ஓடிபியை நீங்கள் உள்ளிட்டதும் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆதார் அட்டை இணைக்கும் செயல்முறை நிறைவடைந்து விடும்.

மேலும் படிக்க | இந்தியாவின் அதிவேக ரயிலைப் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News