பியுஷ் கோயல் தலைமையில் இந்திய ரயில்வே ஒரு புதிய முன்முயற்சியைக் மேற்கொண்டு வருகிறது. இது அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்கள், ஜனவரி முதல் பயணிகள் பயணத்தின் போது அழகு சாதன பொருட்கள் வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பல உபயோகமான பொருட்களை வாங்க முடியும். இதனால், ரயில்வேயின் வருமானம் அதிகரிக்கும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை திட்டம் இந்தியாவில் முதன்முதலில் மேற்கு ரயில்வேயின் மும்பை பிரிவில் இருந்து தொடங்குகிறது. இதற்காக 16 எக்ஸ்பிரஸ் ரயில்களில் தேசிய போக்குவரத்து மூலம் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்க்கான ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு HBN நெட்வொர்க் தனியார் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் 3.66 கோடி ரூபாய்க்கு போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அழகு, வீடு மற்றும் சமையல் உபகரணங்கள் மற்றும் இதர உடற்பயிற்சி என FMCG பொருட்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் சிகரெட்கள், குட்கா, புகையிலை மற்றும் மது விற்க அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த விற்பனைக்கு இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் சீருடை, நிறுவனம் ஐடி மற்றும் டெபிட் கார்டு இயந்திரங்களுடன் விற்பனையில் ஈடுபடுவார்கள். இந்த பொருட்கள் காலை 8 மணி முதல் மாலை 9 மணி வரை விற்பனை செய்யப்படும். இந்த பொருட்களை பற்று அட்டை (Debit Card) மற்றும் கடன் அட்டை (Credit Card) மூலம் வாங்கலாம்.
இந்த முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில், இந்தியா முழுவதும் படிப்படியாக அதிக ரயில்களில், இந்த திட்டம் விரைவு படுத்தப்படும். தற்போது எந்த ரயில்களில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்பது கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
> Phase 1: Train number 12925/26 Paschim Express from Bandra Terminus to Amritsar Junction
> Phase 1: Train number 19027/28 Bandra Jammu Tawi Vivek Express
> Phase 2: Train number 22921/22 Antyodaya Express from Bandra Terminus to Gorakhpur Junction
> Phase 2: Train number 22913/14 BDTS PNBE Express from Bandra Terminus to Patna Junction
> Phase 3: Train number 22949/50 Bandra Delhi Sarai Rohilla Express
> Phase 3: Train number 22917/18 Haridwar Express from Bandra Terminus to Haridwar
> Phase 4: Train number 12009/10 Mumbai Central Ahmedabad Shatabdi Express
> Phase 4: Train number 22915/16 BDTS HSR SF Express from Bandra Terminus to Hisar
> Phase 5: Train number 12907/08 Bandra Nizamuddin Sampark Kranti Express
> Phase 5: Train number 19061/62 BDTS RMR Express from Bandra Terminus to Ramnagar
> Phase 6: Train number 19021/22 BDTS LJN Express from Bandra Terminus to Lucknow Junction
> Phase 6: Train number 22933/34 BDTS JP Express from Bandra Terminus to Jaipur
> Phase 7: Train number 12909/10 Bandra Nizamuddin Garibrath Express
> Phase 7: Train number 22935/36 BDTS PIT Express from Bandra Terminus to Palitana
> Phase 8: Train number 22931/32 BDTS JSM Express from Bandra Terminus to Jaisalmer
> Phase 8: Train number 22991/92 BDTS VRL Express from Bandra Terminus to Veraval
சரியான அடையாள அட்டை வைத்திருக்கும் இந்திய இரயில்வே ஊழியர்களுக்கு அனைத்து பொருட்களின் மீது 10% தள்ளுபடி கிடைக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.