60,000 ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: விரைவில் ஊதியத்தில் உயர்வு

சுமார் 60,000 பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் இந்த ஆண்டிலேயே நடைபெறும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2021, 02:20 PM IST
60,000 ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: விரைவில் ஊதியத்தில் உயர்வு title=

Wage Revision for PSU Employees: ஜெனரல் இன்சூரன்ஸ் பொதுத் துறை நிறுவனங்களில் (PSU) பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி!!

ஜெனரல் இன்சூரன்ஸ் பொதுத் துறை நிறுவனங்களில் (PSU) பணிபுரியும் சுமார் 60,000 ஊழியர்களுக்கு கூடிய விரைவில் 15% ஊதியத் திருத்தம் செய்யப்படும் என்று ஜீ பிசினஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

சுமார் 60,000 பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் இந்த ஆண்டிலேயே நடைபெறும் என நிதி அமைச்சக (Finance Ministry) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

பொதுவாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் நடைபெறும் என்பதும், ஜெனரல் இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஊதிய திருத்தம் கடைசியாக 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ:7th Pay Commission: BSNL ஊழியர்களுக்கு நல்ல செய்தி, நவம்பர் மாதம் ஊதியத்தில் ஏற்றம் 

சமீபத்தில், GIPSA தலைவரும், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சிஎம்டியுமான அதுல் சஹாய், "ஊதிய மறுசீரமைப்புப் பிரச்சினை மிக விரைவில் தீர்க்கப்படும். பெரும்பாலும் டிசம்பருக்குள் இது தீர்க்கப்படும். ஆனால் ஊழியர் நிலுவைத் தொகைக்காகப் போராடத் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறினார். அவர் ஊழியர்களிடம் பேசுகையில், இவ்வாறு தெரிவித்ததாக அறிக்கை கூறியது.

தேசிய பொது காப்பீட்டு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் (CONFED) விஜய் பிரகாஷ் ஷர்மா, "எல்ஐசியின் (LIC) மாதிரியில் 15% பிரிவு இருக்க வேண்டும். மேலும் ஊழியர்கள் நிலுவைத் தொகையையும் பெற வேண்டும்" என்று கூறினார்.

நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் பொதுக் காப்பீட்டுத் துறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களில் 60,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

நான்கு நிறுவனங்களில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மட்டுமே பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.

ALSO READ:மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: இனி இந்த வசதி கிடையாது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News