Actress Vidya Balan Weight Loss Diet Plan : பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக விளங்குபவர் வித்யா பாலன். 45 வயதாகும் இவர், தமிழில் தனது முதல் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களுக்காக இந்தியில் இன்ட்ரோ ஆக நேர்ந்தது. தொடர்ந்து இந்தி திரை உலகில் படங்களில் நடித்து சாதனைகளை படுத்திருக்கும் இவர் உடல் எடையை குறைக்க முடியும் அவதிப்பட்ட பிரபலங்களில் ஒருவர்.
உடல் எடையை குறைக்க முடியாமல் அவதி…
ஒரு சிலரால், என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் இருக்கும். கடுமையான டயட் இருந்து பார்த்தாலும் சரி, கார்டியோ உடற்பயிற்சிகளை நாக்குத்தள்ள செய்தாலும் சரி, உடல் எடை குறையவே குறையாது. இதற்கு காரணம், அவர்களின் உடல் அமைப்பாகவோ, மரபணு பிரச்சனையாகவோ இருக்கலாம்.
வித்யா பாலனுக்கு உடல் வீக்கம் (inflammation) காரணமாக எடை அதிகமாக காணப்படுவதாக, அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். தான் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டதாக கூறும் அவர், கடுமையாக டயட் இருந்து அதற்காக ட்ரெயினர்ஸ் வைத்து தினமும் கார்டியோ உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் உடல் எடையை குறைந்தாலும், மீண்டும் சரசரவென ஏறும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, சமீப காலமாகத்தான் அவர் எடையை குறைத்தார். இதற்கு பின் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
சீக்ரெட்!
வித்யா பாலன், சென்னையை சேர்ந்த அமுரா ஹெல்த் எனும் ஊட்டச்சத்து குழு மூலம் வெயிட் லாஸ் செய்திருக்கிறார். இங்கு, அவருக்கு உடல் எடையை குறைக்க வேறு மாதிரியான அணுகுமுறைகளை கையாண்டிருக்கின்றனர். இது குறித்து பேசிய போது, இந்த ஆண்டுதான் உடற்பயிற்சி செய்யாமல் தான் உடல் எடையை குறைத்ததாக அவர் கூறியிருக்கிறார்.
இந்த முறை, தன் உடலுக்கு ஏற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் இவர், தன் உடலில் இருப்பது வீக்கம்தான் என்றும், இதற்கும் கொழுப்புக்கும் சம்மந்தமே இல்லை என்றும் கூறியிருக்கிறார். தன் உடல் வீக்கத்திற்கு காரணமாக இருக்கும் உணவுகளை டயட்டில் இருந்து தூக்கியவுடன் எடை குறைய ஆரம்பித்ததாக அவர் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..
உணவு..
அனைத்து உணவுகளும், அனைவரது உடலுக்கும் ஒப்புக்கொள்ளாது என்று கூறிய வித்யா பாலன், தான் சைவ உணவை மட்டும் சாப்பிடுவதால் அதற்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
கீரையும், வேர்க்கடலையும் தன் உடலுக்கு ஒவ்வாததால், அதை டயட்டில் இருந்து தூக்கியதாக கூறும் அவர், பச்சை காய்கறிகளில் உங்களுக்கு எது ஒப்புக்கொள்ளுமோ அதை மட்டும் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும், எடையை குறைக்க விரும்புபவர்கள், சரியான உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதன் பிறகு ஜிம் குறித்து யோசிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ