உறக்கத்தில் எத்தனை வகை., எத்தனை நிலைகள் உள்ளது?

இளம் வயதினருக்கு தினமும் 7 முதல் 9 மணி நேரம் உறக்கம் அவசியம் என பலரும் கூறுவர்., இந்த கூற்று எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம்?

Updated: Aug 3, 2018, 07:00 PM IST
உறக்கத்தில் எத்தனை வகை., எத்தனை நிலைகள் உள்ளது?

இளம் வயதினருக்கு தினமும் 7 முதல் 9 மணி நேரம் உறக்கம் அவசியம் என பலரும் கூறுவர்., இந்த கூற்று எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம்?

உறக்கத்தின் பலன் எவ்வளவு நேரம் உறங்குகின்றோம் என்பதை பொருத்து மட்டும் அல்ல, எவ்வாறு உறங்குகின்றோம் என்பதையும் பொருத்து தான். நாம் உறங்குகையில் நம் உடல் ஓர் உறக்க சுழற்சியினை மேற்கொள்கிறது. இந்த சுழற்சி முழுமையடைந்தால் மட்டுமே அதனை நல்ல உறக்கம் என்கின்றோம். உதாரணத்திற்கு கலைப்பில் உறங்கும் நாம் புத்துனர்ச்சியுடன் எழுந்தால் அது முழுமையான உறக்கம் என அழைக்கப்படுகிறது.

நாம் உறங்குகையில் நம் கருவிழிகள் இயக்கத்தில் இருப்பதினை உணர்ந்திருப்போம். இந்த இயக்கமானது நம் மூலை அசைவுகளை குறைக்கின்றது. Non-Rapid Eye Movement என்னும் இந்த செயல்பாட்டினால் தரமான உறக்கத்தினை பெற முடிகிறது மேலும் இந்த நிலையில் இருந்து நம் உறக்கத்தினை கலைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

உறக்கத்தில் எத்தனை வகை., எத்தனை நிலைகள் உள்ளது?

பொதுவாக உறக்கம் REM மற்றும் Non-REM இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. நம் உறக்கமானது REM நிலையில் துவங்கி Non-REM நிலையில் தொடர்கிறது. இந்த உறக்க சுழற்ச்சி ஆனது ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு மீண்டும் REM நிலையில் துவங்கும்.

உறக்கத்தின் போது ஆழ்ந்த உறக்கும் என்னும் நிலை Non-REM நிலையினை எட்டும்போது பெறுகின்றோம். 

Non-REM நிலை...

நிலை 1:-

 • இந்த Non-REM நிலையானது, நாம் உறக்கத்தில் இருந்து எழுவதற்கு சிறிது நிமிடங்களுக்கு முன்வரை நீடிக்கும். இந்த நிலையில்....
 • இதயதுடிப்பு, கருவிழி நகர்வு போன்ற செயல்பாடுகளின் வேகம் குறையும்.
 • உடல் தசைகள் நீண்ட கால இடைவெளியில் அசையும்.
 • மூளையின் செயல்பாடு சிறிது சிறிதாக குறைந்து முழுமையாக தூங்கும் நிலைக்கு செல்லும்.

நிலை 2:-

 • ஏறக்குறைய 50% தூக்கமானது இந்த நிலையில் தான் இருக்கும்.
 • உடல் பாகங்களின் செயல்பாடு வேகம் குறைந்து ஓய்வு நிலையினை அடையும்.
 • கருவிழி அசைவு முழுவதுமாக நின்றுவிடும்.
 • மூளையின் செயல்பாடு முழுவதுமாக செயலிழக்கும், எனினும் சிறு அசைவுகளில் மீளும் நிலையில் தொடரும்.

நிலை 3 மற்றும் 4;- ஆழ்ந்த தூக்க நிலையினை அடைதல்.

 • இதய துடிப்பு மற்றும் சுவாசத்தின் வேகம், உடல் அசைவுகளின் வேகத்தினைப் போல் குறைந்துவிடும்.
 • மூளையின் அசைவு முழுவதுமாக ஓய்ந்துவிடும். உரத்த சப்தங்கள் எழுந்தாலும் தூக்கத்தினை கலைப்பது கடினம்.
 • இந்த ஆழ்ந்து உறக்க நிலையினை slow wave sleep என்றும் அழைக்கின்றனர்.

REM நிலை...

நிலை 5:-

 • இருதிசைகளை நோக்கி கருவிழி அசைவு அலைபாயும்.
 • கனவு, மூளையின் இயக்கத்தினை உணர இயலும்.
 • உறக்கம் கலையும் நிலையில் இதயதுடிப்பின் அளவு கனிசமாக அதிகரிக்கும்.
 • இயல்பு நிலையினை விட அதிகமாக சுவாசத்தின் வேகம் இருக்கும்.
 • கை, கால் மூட்டுகள் ஒரே திசையினை நோக்கி இருக்கும்.

உறக்கத்தில் இந்த 5 நிலையினை நம் உடல் சரியாக கடக்கும் பட்சத்தில் உறக்கத்தின் தன்மை நன்றாக இருக்கும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.