இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் என்னும் கணினி இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருள் என்ற நிலைக்கு வந்து விட்ட கம்யூட்டரில், PC எனப்படும் டெஸ்க் டாப் வகை கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கும் லேப்டாப் என்னும் மடிக் கணிணி வேலைக்கு செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பொருளாக உள்ளது.
மடிக்கணினியின் பேட்டரி அதன் மிக முக்கியமான விஷயம். பேட்டரி நல்ல நிலையில் இருந்தால், தடையின்றி வேலை செய்யலாம். ஆனால் பல நேரங்களில் லேப்டாப் பேட்டரி மிக விரைவாக தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டு, நமது பணிகள் தடைபடும் சூழல் உருவாகலாம்.
குறிப்பாக நாம் நிறைய செயலிகள் மற்றும் வலைத்தளங்களை திறந்து பயன்படுத்தும் போது, லேப்டாப் பேட்டரி, சீக்கிரம் தீர்ந்து போகும் நிலை ஏற்படலாம். ஆனால் செட்டிங்ஸ் பிரிவில் சரியாக செட் செய்தால் நமது லேப்டாப்பின் பேட்டரி (Tech Tips) நீண்ட நேரம் நீடித்து இருக்கும்.
சிறந்த ஆற்றல் திறன் (Power Efficiency Mode)
உங்கள் மடிக்கணினியின் பேட்டரி திறனை மேம்படுத்த, "Power Efficiency Mode" பயன்முறையை ஆக்டிவேட் செய்யலாம். இந்த பயன்முறையில், உங்கள் மடிக்கணினி குறைந்த சக்தியைப் பயன்படுத்தும். இதன் காரணமாக பேட்டரி நீண்ட நேரம் தாக்கு பிடிக்கும். நீங்கள் நிறைய பயன்படுத்த வேண்டியிருக்கும் நிலையில் இந்த பயன்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
'ஆட்டோ எனர்ஜி சேவர்' பயன்படுத்தவும் (Auto Energy Saver)
பேட்டரி 30% ஆக குறையும் போது, உங்கள் லேப்டாப்பை தானாக பேட்டரியை சேமிக்கும் வகையில் செட்டிங் அமைக்கலாம். இது உங்கள் லேப்டாப்பில் அழுத்தத்தை குறைக்கும் மற்றும் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும்.
மேலும் படிக்க | கூகுள் மேப்ஸ்... ஒரு வழிகாட்டி மட்டுமல்ல... இந்த தகல்களையும் வழங்கும்
திரையை தானாக அணைப்பதன் மூலம் ஆற்றலைச் சேமிக்கவும்
திரையை ஆட்டோ- ஆஃப் செய்வதன் மூலம் பேட்டரியை சேமிக்கலாம்
நீங்கள் சிறிது நேரம் மடிக்கணினியைப் பயன்படுத்தாவிட்டால், திரை தானாகவே அணைக்கப்படும் மற்றும் மடிக்கணினி உறக்கநிலைக்கு செல்லும் வகையில் செட்டிங்க்ஸ் ( auto turn-off screen and hibernation) செய்யலாம். இது உங்கள் மடிக்கணினியின் பேட்டரி திறன் வீணாவதை தடுக்கும். .
திரையின் பிரகாசத்தை செட்டிங் செய்தல் (auto brightness on laptop)
உங்கள் மடிக்கணினியின் காரணமாக உங்கள் திரையின் பிரகாசம் சுற்றியுள்ள ஒளிக்கு ஏற்ப தானாகவே மாறும். குறைந்த வெளிச்சம் இருந்தால், திரையின் வெளிச்சம் குறையும், அதிக வெளிச்சத்தில், வெளிச்சம் அதிகரிக்கும். இது உங்கள் மடிக்கணினியின் பேட்டரிதிறன் வீணாவதை தடுக்கும்.
ஸ்லீப் மோடிற்கு தானாகவே செல்லும் வகையில் செட்டிங்க்ஸில் மாற்றம் (close the lid to sleep)
நீங்கள் மடிக்கணினியை மூடும்போது, அது தானாகவே தூக்க பயன்முறைக்கு செல்லும் வகையில் close the lid to sleep என செட்டிங்ஸ் அமைப்பதன் மூலம். உங்கள் மடிக்கணினியின் பேட்டரி திறன் வீணாவதை தடுக்கும். இது உங்கள் மடிக்கணினியின் பேட்டரி திறன் வீணாவதை தடுக்காலாம். இதன் மூலம் பேட்டரி, நீண்ட நேரம் நீடிக்கும்.
மேலும் படிக்க | ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய போறீங்களா... இந்த தப்பை செஞ்சுடாதீங்க...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ