EPFO அசத்தலான அப்டேட்: பிஎஃப் உறுப்பினர்களுக்கு ரூ.50,000 போனஸ்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?

EPFO Udpate: பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) இபிஎஃப் கார்பஸ் தொகை, ஓய்வூதியம் தவிர கடன்கள் மற்றும் காப்பீடுகளையும் வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல் போனஸ் மற்றும் கூடுதல் போனஸ் போன்ற வசதிகளையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 7, 2024, 12:33 PM IST
  • இபிஎஃப்ஒ போனஸ் யாருக்கு கிடைக்கும்?
  • இபிஎஃப்ஒ போனஸ் எப்போது கிடைக்கும்?
  • இபிஎஃப்ஒ போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
EPFO அசத்தலான அப்டேட்: பிஎஃப் உறுப்பினர்களுக்கு ரூ.50,000 போனஸ்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?

EPFO Udpate: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. PF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான முக்கியமான நிதி பாதுகாப்பாக இபிஎஃப் தொகை (EPF Account) பார்க்கப்படுகின்றது. ஆனால், இது தவிர இதன் மூலம் இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
 
பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) இபிஎஃப் கார்பஸ் தொகை, ஓய்வூதியம் தவிர கடன்கள் மற்றும் காப்பீடுகளையும் வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல் போனஸ் மற்றும் கூடுதல் போனஸ் போன்ற வசதிகளையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது என்பது மிகச் சிலருக்கே தெரியும்.

EPFO Bonus: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் போனஸ் தொகை

இந்த போனஸின் தொகை ரூ.50,000 வரை இருக்கக்கூடும். ஆனால் இது குறித்து பலருக்கு தெரியாததால், பல ஊழியர்கள் இந்த போனஸ் வசதியை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். இந்த கூடுதல் போனஸை எப்படிப் பெறுவது? அதற்கு என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும்? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Loyalty cum Life Benefit: போனஸ் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டது

- EPFO வழங்கும் கூடுதல் போனஸ் 'லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட்' என்பதன் கீழ் வருகிறது. 
- இதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 
- இந்த போனஸ் குறைந்தபட்சம் 20 வருடங்களாக இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. 
- இந்த போனஸ் ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 
- அதிகபட்ச போனஸ் தொகை ரூ.50,000 வரை இருக்கக்கூடும்.

மேலும் படிக்க | அம்மாடி, இவ்வளவு சம்பள உயர்வா!! 8வது ஊதியக்குழு...... மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது நல்ல செய்தி

போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இபிஎஃப் உறுப்பினரின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் போனஸ் கணக்கிடப்படுகிறது. 

உதாரணமாக:

- அடிப்படை சம்பளம் ரூ.5,000 ஆக இருக்கும் ஊழியர்களுக்கு போனஸாக ரூ.30,000 கிடைக்கும்.
- அடிப்படைச் சம்பளம் 10,000 ரூபாயாக இருப்பவர்களுக்கு போனஸாக 40,000 ரூபாய் வரை கிடைக்கும்.
- இதற்கு மேலான அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு போனஸ் தொகை ரூ.50,000 ஆக இருக்கும்.

இந்த போனஸ் யாருக்கு கிடைக்கும்

போனஸைப் பெற குறைந்தபட்சம் 20 வருட சேவை தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவிலான சேவைக்காலத்தை முடிக்காத பணியாளர்களுக்கு இந்த போனஸ் பெற தகுதி இருக்காது. 

இபிஎஃப்ஒ போனஸ் எப்போது கிடைக்கும்?
 
இபிஎஃப்ஒ போனஸ் ஓய்வு பெறும்போது கிடைக்கும். இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு கூடுதல் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த கூடுதல் போனஸ் வசதியைத் தொடங்கியுள்ளது. 20 வருட சேவையை முடித்திருக்கும் இபிஎஃப் உறுப்பினர்கள், அவர்களது அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப கூடுதல் போனஸுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த செயல்முறையை ஆன்லைனிலும் செய்யலாம். ஆன்லைனில் இதை எளிதாக கிளெய்ம் செய்ய முடியும்.

இந்த போனசுக்கான தகுதி உள்ள இபிஎஃப் உறுப்பினர்கள் கண்டிப்பாக இந்த வசதியை பயன்படுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு 20 வருட சேவையுடன் உங்கள் அடிப்படை சம்பளம் பற்றிய தகவல்களும் இருப்பது முக்கியம். நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், உங்கள் PF கணக்கின் மூலம் இந்த கூடுதல் போனஸைப் பெறுவதற்கான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

மேலும் படிக்க | 7.9% வரை வட்டி கொடுக்கும் இந்த 7 வங்கிகள்... FD மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News