தண்ணீரை இப்படி அருந்தினால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்!

பிளாஸ்டிக் பாட்டிலில் இரவு முழுவதும் வைத்திருந்த நீரை பருகுவது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2022, 06:38 PM IST
  • நமது மனித உடல் 70% நீரால் தான் நிரம்பியுள்ளது.
  • நமது சுற்றுசூழல் அதிக தூசுக்களால் நிறைந்துள்ளது
  • பழைய நீரை குடிப்பது தவறானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தண்ணீரை இப்படி அருந்தினால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்! title=

ஒருவரது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு எந்த அளவிற்கு தேவையோ அதைவிட முக்கியமானது தண்ணீர்.  நமது மனித உடல் 70% நீரால் தான் நிரம்பியுள்ளது, நீரானது வியர்வை போன்ற உடலில் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றவும், உடலை சுத்திகரிக்கவும், உடலை சுறுப்பாக வைக்கவும் உதவுகிறது.  சிலருக்கு காலையில் தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் தாகம் ஏற்படும், அப்படி தாகம் எடுக்கையில் அவர்கள் இரவில் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த நீரை எடுத்து பருகுவார்கள், ஆனால் இவ்வாறு பழைய நீரை குடிப்பது தவறானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க | இரவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

மூடி வைக்காத நீரினுள் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வினைபுரியும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லையென்றாலும் நீரின் அமில காரத்தன்மையில் மாற்றம் ஏற்படும்.  மேலும் மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், இரவு முழுவதும் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த பழைய நீரை ஆரோக்கியமானவர்கள் குடித்தால் அவர்கள் உடலில் தீங்கு எதுவும் ஏற்படாது.  ஆனால் ஏதேனும் நோய் பாதிப்பு இருப்பவர்கள் இத்தகைய பழைய நீரை அருந்தினால் அவர்களுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு ஏற்படும்.

நமது சுற்றுசூழல் அதிக தூசுக்களால் நிறைந்துள்ளது, அதனால் இரவு முழுவதும் வைத்துள்ள நீரில் சில தூசுகள் சேர வாய்ப்புள்ளது.  நீண்ட நாட்களுக்கு ஒரே பாத்திரத்தில் நீரை சேமித்து வைத்திருந்தால் அந்த பாத்திரங்களில் ஒருவகையான துர்நாற்றம் வீச தொடங்கும்.  அதேபோல குடிநீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமித்து வைத்து குடிப்பது உடலுக்கு அதிக தீங்கை விளைவிக்கக்கூடியதாக அமையும்.  அதேபோல காருக்குள், பாட்டிலில் நீரை சேமித்து வைத்து குடிப்பது நல்லதல்ல, ஏனெனில் கார் மூடியிருப்பதால் அதற்குள் சூரிய ஒளி புக வாய்ப்பில்லாமல் பேக்டீரியாக்கள் உருவாகிவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

குடிநீரை தாமிர பாத்திரங்களில் வைத்து குடிப்பதே உடலுக்கு நன்மையை பயக்கும் என்று சொல்லப்படுகிறது.   பாத்திரங்களில் உள்ள நீரை பருகுவதன் மூலம் உடல் எடை குறைவு, சிறந்த செரிமானம், ரத்தசோகை குணமாகுதல், இதயத்திற்கு வலு சேர்த்தல், உடல் மற்றும் முக பொலிவுவை தருதல் போன்ற நன்மைகளை உடல் பெறுகிறது.

மேலும் படிக்க | Death Lake: உலகின் மர்மமான ஏரி! இந்த ஏரியின் நீர் உயிரைக் குடிக்கும்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News