மலிவான விலையில் ரயில் டிக்கெட்! IRCTC உடன் இணைந்த அதிரடி காட்டும் நிறுவனம்

Railway Ticket Offer: எச்டிஎஃப்சி வங்கி ஐஆர்சிடிசி உடன் இணைந்து ரூபே ஐஆர்சிடிசி (RuPay IRCTC) கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு பயனுள்ள கிரெடிட் கார்டாக இருக்கும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 20, 2022, 07:18 PM IST
  • இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வருகிறது.
  • எச்டிஎஃப்சி - ஐஆர்சிடிசி இணைந்து புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்.
  • ரயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு பயன்தரும்.
மலிவான விலையில் ரயில் டிக்கெட்! IRCTC உடன் இணைந்த அதிரடி காட்டும் நிறுவனம் title=

IRCTC Ticket Booking: விமானத்தில் பயணம் செய்வது என்பது அனைவராலும் முடியாத காரியம். விண்ணை முட்டும் கட்டணம் தான் அதற்கு காரணம். அதனால் ரயிலில் பயணம் செய்வது மக்களுக்கு செலவு குறையும். அதேநேரத்தில் குறைந்த விலையில் ரயில் டிக்கெட்டுகள் கிடைத்தால், மக்கள் இன்னும் பயனடைவார்கள். அதுவும் குறைந்த விலை டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் பதிவு செய்துக்கொள்ளலாம். இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருந்தபடியே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மிகவும் மலிவாக இருக்கும். அதற்கான வழியை தெரிந்துக்கொள்ளுவோம்.. வாருங்கள். இப்போது ஐஆர்சிடிசி (IRCTC) உடன் இணைந்து ஒரு நிறுவனம் ரயிலில் பயணிப்பவர்களுக்கு மிகச் சிறந்த சலுகைகளை வழங்குகிறது.

கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வருகிறது:

உலகம் டிஜிட்டலை நோக்கி சென்றுக்கொண்டு இருப்பதால், இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வருகிறது. இப்போது பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகளும் இந்தியாவில் கிடைக்கின்றன. டிஜிட்டல் உலகின் விரிவாக்கம் மற்றும் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளை (Contactless Payment) ஏற்றுக்கொண்டதன் விளைவாக கிரெடிட் கார்டு வணிகம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய முடிவுகளை எடுத்து தங்கள் வணிகத்தை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க: எல்ஐசி ஜீவன் ஆனந்த்: மாதம் ரூ.1358 முதலீடு செய்து ரூ.25 லட்சம் பெறலாம்!

ரூபே ஐஆர்சிடிசி கிரெடிட் கார்டு பயன்கள்:

இப்போது சமீபத்தில் எச்டிஎஃப்சி வங்கி ஐஆர்சிடிசி உடன் இணைந்து ரூபே ஐஆர்சிடிசி (RuPay IRCTC) கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அட்டையின் ஆண்டுக் கட்டணம் ரூ. 499 மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள கிரெடிட் கார்டாக இருக்கும்.

கார்டு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் இந்த அட்டை மூலம் ஏதேனும் பரிவர்த்தனை செய்யப்பட்டால், வெல்கம் பெனிபிட்டாக ரூ.500 அமேசான் வவுச்சர் வழங்கப்படும். அதேசமயம், 100 ரூபாய் செலவழித்தால் 5 ரிவார்டு புள்ளிகளும், ஸ்மார்ட் பை மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 5% கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இது பயனளிக்கும்.

இது தவிர, ரயில் டிக்கெட் மட்டுமில்லாமல் மற்ற இடங்களில் செய்யப்படும் பரிவரத்தனை ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 1 ரிவார்டு பாயிண்ட் வழங்கப்படும். இந்தக் கார்டிலிருந்து கிடைக்கும் வெகுமதிகளைப் பயன்படுத்தி பலவிதமான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறலாம். மேலும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பரிவர்த்தனைகள் செய்வதில் தள்ளுபடியைப் பெறலாம். பரிவர்த்தனை தொகை ரூ.400 முதல் ரூ.5000 வரை இருக்க வேண்டும். இதன் மூலம் ரூபே ஐஆர்சிடிசி கிரெடிட் கார்டை பயன்படுத்துவோர் அதிக பயன் பெறுவார்கள்.

இந்த கிரெடிட் கார்டு மூலம் ரயில் நிலையத்தில் ஓய்வறையையும் பெறலாம். இந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, ஒரு வருடத்தில் நான்கு Railway Lounge பெறலாம். காலாண்டுக்கு ஒரு முறை Railway Lounge பெறலாம்.

மேலும் படிக்க: வங்கிகளிலிருந்து குறைந்த வட்டி விகிதத்தில் சுலபமாக தனிநபர் கடன் பெற வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News