RBI New Locker Rules: உங்கள் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை வங்கிகளின் லாக்கரில் வைத்திருந்தால், இந்த செய்தியை கவனமாகப் படியுங்கள். லாக்கர்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் லாக்கர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் அடுத்த ஆண்டு அதாவது ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். இந்த புதிய விதிகள் என்ன, அவை உங்களை எவ்வாறு பாதிக்கப் போகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
1. லாக்கரில் வைக்கப்பட்ட பொருட்களின் பாதிப்பிற்கு இழப்பீடு
ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, வங்கிகளின் அலட்சியம் காரணமாக லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான அவர்களின் பொறுப்பு வரையறுக்கப்படும். அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இயற்கை பேரிடர், அதாவது, பூகம்பம், வெள்ளம், மின்னல், புயல் மற்றும் சூறாவளி போன்றவற்றினால் ஏற்படும் எந்த இழப்பிற்கும் வங்கி பொறுப்பேற்காது. ஆனால் வங்கி அதன் பொறுப்புகளிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படும் என்று அர்த்தமாகாது. வங்கிகள் இத்தகைய இடர்பாடுகளிலிருந்து தங்கள் இடங்களைப் பாதுகாக்க சரியான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.
ALSO READ: டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்துகிறீர்களா? இந்த விதிகள் மாறவுள்ளன!!
2. திருட்டு அல்லது மோசடி நடந்தால், வங்கி இழப்பீடு கொடுக்கும்
லாக்கர்கள் இருக்கும் வளாகத்தின் பாதுகாப்பின் முழுப் பொறுப்பும் வங்கியிடமே இருக்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கி ஊழியர்களின் அலட்சியம் காரணமாக, தீ, திருட்டு, கட்டிடம் இடிந்து விழுந்தால் அல்லது மோசடி நடந்தால், வங்கிகளின் பொறுப்பு அவர்கள் லாக்கருக்காக வசூலிக்கும் ஆண்டு வாடகையின் 100 மடங்கு என்ற அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.
3. வாடகை பணம் செலுத்தப்படாவிட்டால் லாக்கரைத் திறக்கலாம்
லாக்கருக்கான வாடகையை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாடிக்கையாளர் செலுத்தப்படாவிட்டால், வங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். மேலும், உரிய வழிமுறையை பின்பற்றி எந்த லாக்கரையும் திறக்கலாம்.
4. சட்டவிரோதமான பொருட்களை சேமிக்க முடியாது
இது மட்டுமல்ல, ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கிகள் லாக்கர் ஒப்பந்தத்தில் ஒரு விதிமுறையை சேர்க்க வேண்டும், அதன் கீழ் லாக்கர் வாடகை வாடிக்கையாளர் சட்டவிரோதமான அல்லது ஆபத்தான பொருட்களை லாக்கரில் வைத்திருக்க முடியாது.
ALSO READ | SBI பிளாட்டினம் டெபாஸிட் திட்டத்தில் கூடுதல் வட்டி; இன்றே இத்திட்டத்தில் இணையுங்கள்
5. காத்திருப்பு பட்டியல் எண் வெளியிடப்படும்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் செயல்பாடுகளின் விபரங்களை எஸ்எம்எஸ் (SMS) மற்றும் மின்னஞ்சல் (e-mail) ஆகியவற்றை வங்கிகள் அனுப்ப வேண்டியது அவசியம். லாக்கர் ஒதுக்கீட்டிற்கான அனைத்து விண்ணப்பங்களுக்கும் வங்கிகள் ரசீது வழங்க வேண்டும். லாக்கர் கிடைக்கவில்லை என்றால், வங்கிகள் காத்திருக்கும் பட்டியலின் எண் தொடர்பான தகவல்களை வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டும். கிளை வாரியாக லாக்கர் ஒதுக்கீடு செய்யும் தகவல் மற்றும் வங்கிகளின் காத்திருப்பு பட்டியல், கோர் பேங்கிங் சிஸ்டம் (சிபிஎஸ்) அல்லது சைபர் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு, இணையான வேறு எந்த கணினிமயமாக்கப்பட்ட அமைப்புகளுடன் இணைக்கப்படும்.
6. இந்த வாடிக்கையாளர்களும் இந்த வசதியைப் பெறுவார்கள்
புதிய வழிகாட்டுதல்களின்படி, வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதிக்கு விண்ணப்பித்தவர்களின், CDD (Customer Due Diligence) விதிமுறைகளுடன் முழுமையாக இணங்குவோருக்கு லாக்கர் வசதியை வழங்கலாம். புதிய விதியின் படி, தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், வங்கி தொடர்பும் இல்லாத பிற வாடிக்கையாளர்களுக்கும் லாக்கர் வசதியை வழங்க முடியும்.
7. லாக்கர்களை மாற்றுவதற்கான புதிய விதிகள்
வாடிக்கையாளருக்கு அறிவித்த பின்னரே வங்கிகள் லாக்கரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியும். வாடிக்கையான டெர்ம் டெபாஸிட் வைப்புத்தொகையை லாக்கர் வாடகையாகப் பயன்படுத்தலாம். ஸ்ட்ராங் ரூம்/பெட்டகங்களை அதாவது லாக்கர்களை பாதுகாக்க வங்கி போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 180 நாட்கள் வரையிலான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைத்திருப்பது அவசியம்.
ALSO READ: வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி: ஏப்ரல் 1 முதல் OTP பெறுவதில் பிரச்சனை வரும்