இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் பல சுற்றுலாப் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது, லக்னோவில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு பயணிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ப ஒரு சுற்றுலா தொகுப்பை IRCTC அறிவித்துள்ளது. ஆறு பகல் மற்றும் ஐந்து இரவுகளளை உள்ளடக்கிய இந்த சுற்றுலாவில் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோயில் மற்றும் விக்டோரியா மெமோரியல் போன்ற பல சுற்றுலாத் தலங்களையும், போர்ட் பிளேயரில் உள்ள வரலாற்று செல்லுலார் சிறை, கோர்பின் கோவ் பீச், சாமுத்ரிகா மியூசியம் மற்றும் சாகரிகா எம்போரியம் போன்ற பல கடற்கரைகளையும் சுற்றிப் பார்க்கலாம்.
மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே வரலாற்றில் 10 மாத சிறுமிக்கு வேலை! கிடைத்தது எப்படி?
இந்த சுற்றுப் பயணம் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28 ஆம் தேதி முடிவடைகிறது. லக்னோவில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு கொல்கத்தா வழியாக பயணம் மேற்கொள்ளப்படும். பயணிகள் லக்னோவில் இருந்து கொல்கத்தாவிற்கு ரயில் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர், கொல்கத்தாவில் இருந்து, அந்தமான் தீவுகளுக்கு விமானம் மூலம் பயணிப்பார்கள். இந்த சுற்றுப்பயணத்தில் தங்குமிடம் மற்றும் காலை உணவு, இரவு உணவும் அடங்கும்.
லக்னோவில் இருந்து அந்தமான் வரை பயணிக்க ஒரு நபருக்கு ரூ.65,900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு நபர்கள் வந்தால், ஒரு நபருக்கு ரூ.53,785 கட்டணமாக பெறப்படும். மூன்று பேர் கொண்ட குழுவாக வருபவர்களில் ஒருவருக்கு ரூ. 53,295 செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கான பேக்கேஜ் ரூ.49,335. குழந்தைகளுக்கு படுக்கை வேண்டாம் என்றால் ரூ.46,620 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | Indian Railways: டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியது IRCTC
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ