இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு விதிகள்: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்து, டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்திய ரயில்வே அவ்வப்போது தனது விதிகளில் பல மாற்றங்களை செய்கிறது. இது குறித்த தகவல்களும் பயணிகளுக்கு அளிக்கப்படுகின்றன. ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. புதிய விதியின்படி, டிக்கெட் முன்பதிவு செய்ய உங்கள் கணக்கை வெரிஃபை செய்ய வேண்டும்.
மொபைல் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்பு அவசியம்
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசியின் விதிகளின்படி, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் சரிபார்ப்பு இல்லாமல், ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
புதிய விதியை அமல்படுத்த காரணம் என்ன?
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாத ஐஆர்சிடிசி கணக்கின் பயனர்கள் பலர் உள்ளனர். அத்தகையவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். நீங்களும் நீண்ட நாட்களாக இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால், முதலில் சரிபார்ப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். அதன் செயல்முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மொபைல் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்பு செய்வது எப்படி?
- ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்திற்குச் சென்று சரிபார்ப்பு சாளரத்தில் (வெரிஃபிகேஷன் விண்டோ) கிளிக் செய்யவும்.
- இங்கே நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
- இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, சரிபார் (வெரிஃபை) பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- வெரிஃபை என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிட்டு மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்.
- இதேபோல், மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு, உங்கள் மெயில் ஐடி சரிபார்க்கப்படும்.
- இப்போது உங்கள் கணக்கில் இருந்து எந்த ரயிலுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம்.
ஒரு கணக்கில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்
ஐஆர்சிடிசியின் ஒரு யூசர் ஐடியில் ஒரு மாதத்தில் அதிகபட்ச டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வரம்பு 12ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது ரயில்வே பயணிகளுக்கான மற்றொரு பெரிய செய்தியாகும். ஆம், இப்போது நீங்கள் ஆதார் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்னதாக இந்த எண்ணிக்கை 12 ஆக இருந்தது. அதேபோல், ஆதார் இணைக்கப்படாத கணக்கில் இருந்து 6 டிக்கெட்டுகளுக்கு பதிலாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயண திட்டத்தில் திடீர் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ