ரயில் பயணிகளுக்கு அசத்தலான திட்டத்தை வழங்கும் IRCTC!

புதிய ரயில் மற்றும் அந்தந்த வழித்தடத்தின் காலியான பெர்த்கள் பற்றிய தகவல்களை இனிமேல் உங்கள்  மொபைல் போனிலேயே தெரிந்து கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : May 25, 2022, 03:55 PM IST
  • காலியாக இல்லாத இருக்கைகளுக்கு காத்திருப்பு டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம்.
  • பெர்த் காலியாக இருந்தால் அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • இதன் மூலம் பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ரயில் பயணிகளுக்கு அசத்தலான திட்டத்தை வழங்கும் IRCTC! title=

ரயிலில் உங்களுக்கான இருக்கையை தேர்ந்தெடுக்க சில நாட்களுக்கு முன்பே நாம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறோம், ஆனால் இப்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை.  இனிமேல் ரயிலில் ஏதேனும் பெர்த் காலியாக இருந்தால் அதைப் பற்றி தெரிந்துகொண்டு உடனடியாக அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யக்கூடிய வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது.  அந்த அம்சத்தின்படி, ஆன்லைனில்  ஐஆர்சிடிசியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் கிடைப்பதைக் காணலாம். இருக்கை காலியாக இருந்தால் முன்பதிவு செய்தும், காலியாக இல்லாத இருக்கைகளுக்கு காத்திருப்பு டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம்.  

மேலும் படிக்க | Good News: விரைவில் விமானத்திலும் இணைய வசதியை அனுபவிக்கலாம்

அப்படி அந்த இருக்கைக்கு காத்திருப்பபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டாம்.  ரயிலில் காலியாக உள்ள இருக்கைகளை கண்டறியும் வசதி இதுவரையில் இல்லை, ஆனால் தற்போது ஐஆர்சிடிசி இந்த வசதியை தனது பயணிகளுக்கு வழங்குகிறது.  இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி ) புஷ் நோட்டிஃபிகேஷன் வசதியை தொடங்கியுள்ளது.  இதன் மூலம், இருக்கை வசதி உள்ளிட்ட பல வசதிகள் குறித்த தகவல்களை பயனர்கள் பெற முடியும்.  ஐஆர்சிடிசி சமீபத்தில் அதன் இணையதளத்தை புதுப்பித்ததன் மூலம் பல புதிய அம்சங்கள்  சேர்க்கப்பட்டுள்ளன.  ரயிலில் இருக்கை காலியாக இருந்தால், அதன் நோட்டிஃபிகேஷன் பயனாளிகளின் மொபைலுக்கு தெரிவிக்கப்படும்.  இதன் மூலம் பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.  

இதனை செய்ய பயணிகள் முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்று புஷ் நோட்டிஃபிகேஷன் வசதியைப் பெற வேண்டும்.  உதாரணமாக ஒரு குறிப்பிட்ட தேதிக்கு ஒரு ரயிலில் இருக்கையை முன்பதிவு செய்யும்போது, ரயிலில் எந்த இருக்கையும் கிடைக்கவில்லையெனில், நாம் டிக்கெட்டை முன்பதிவு செய்ய மாட்டோம்.  பின்னர் எந்த ரயிலில் இருக்கை காலியாக இருக்கிறது என்பதை பார்ப்போம், அந்த சமயம் ஏதேனும் ஒரு பயணி அவரது டிக்கெட்டை ரத்து செய்தால், உங்கள் மொபைலில் ஒரு நோட்டிஃபிகேஷன் வரும்.  அந்த மெசேஜில் ரயில் எண் பற்றிய தகவல் இருக்கும், அதன் பிறகு விரும்பினால் டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

மேலும் படிக்க | Indian Railways: டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியது IRCTC, இனி நேரம் மிச்சமாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News