இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டேதான் உள்ளது. வீட்டிற்கும் இருக்கும் போது கூட ஏசி தேவை அதிகளவில் உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வெளியில் செல்லும் போதும் ஏசி அவசியம். குறிப்பாக காரில் செல்லும் போது அதில் இருக்கும் ஏர் கண்டிஷனரை ஆன் செய்தால்தான் நிம்மதி பெருமூச்சு வரும். இருப்பினும், அதிக வெப்பம் காரணமாக காரில் உள்ள ஏசி அமைப்புகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. வெப்பமான காலநிலைகளில் உங்கள் காரில் உள்ள ஏசி குளிர்ச்சியடையாமல் இருப்பதற்கான பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | EV கார்களுக்கு ஆப்பு வைக்க வரும் 'இந்த' கார்கள்... காரணம் என்ன?
ஃப்ரீயான் கசிவு
உங்கள் காரில் அதிக கூலிங் வரமால் இருப்பதற்கு முதன்மையான காரணம் ஏர் கண்டிஷனர் கசிவாக இருக்கும். காரின் ஏசி அமைப்புக்கு வெப்பநிலையைக் குறைக்க ஃப்ரீயான் தேவைப்படுகிறது. காரில் இந்த ஃப்ரீயான் கசிவு ஏற்படும் போதெல்லாம் ஏசியின் கூலிங் குறைகிறது. மேலும் உங்கள் காரின் ஏசி குளிர்ந்த காற்றை வீசவில்லை என்பதற்கான மற்றொரு காரணம் கார் ஒரு ஹைப்ரிட் ஆகும். ஏசி சிஸ்டத்திற்கு இன்ஜின் பவர் தேவை, அதாவது உங்கள் கார் EV பயன்முறையில் இருந்தால், என்ஜின் இயங்குவதை நிறுத்திவிடும் மற்றும் ஏர் கண்டிஷனரை இயக்காது.
ஏசி கம்ப்ரசர்
ஏசி கம்ப்ரசர் எந்த ஒரு ஏசிக்கும் முக்கியமானது. இவை தான் கூலிங்கை முடிவு செய்கின்றன. பொதுவாக இவை விலையுயர்ந்த பொருளாகும். எனவே காரில் உள்ள இந்த பகுதி பழுதடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ காரில் ஏசி சரியாக வேலை செய்யாது. இந்த சேதத்திற்கு எங்கையாவது இடித்து இருந்தாலோ அல்லது அதிக வெப்பம் காரணமாகவோ ஏற்படலாம். மேலும் டேஷ்போர்டிற்குள் அமைந்துள்ள ஏசி எவாப்ரேட்டர் காற்றை குளிர்விக்கும். இதில் பாதிப்பு இருந்தாலும் ஏசி சரியாக வேலை செய்யாது.
ப்ளோவர்
ப்ளோவர் விசிறிகளைப் பயன்படுத்தி ஏசி கேபின் முழுவதும் காற்றைச் சுழற்றுகிறது. ஒருவேளை ப்ளோவர் வேலை செய்யவில்லை என்றால், ஏசி மோட்டார் செயலிழப்பு ஏற்பட்டு காரில் ஏசி சரியாக இயங்காது. மேலும் கார் வாங்கி நீண்ட நாட்கள் அகி இருந்தால் இதனை மாற்றுவது நல்லது. அதே போல காரில் எங்காவது ஏசி லீக்கேஜ் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். எனவே கசிவுகளைக் கண்டறிந்து சரிசெய்வது மிகவும் நல்லது.
ஏசி மின்தேக்கி
ஏசி மின்தேக்கியானது ரேடியேட்டர் வழியாக செல்லும் போது காற்றை குளிர்விக்கிறது. இவை காரின் முன்புறத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி சேதமடைய வாய்ப்புள்ளது. ஆனால் மின்தேக்கியை மாற்றுவது விலை உயர்ந்ததாக இருக்கலாம், எனவே இதனை அவ்வப்போது பார்த்துக்கொள்வது செலவை குறைக்கும் மற்றும் காரில் ஏசி நன்றாக வேலை செய்யும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ