ITR filing: ஐடிஆர் தாக்கல் செய்ய 2 நாட்களே உள்ளன, காலக்கெடுவை மிஸ் செய்தால் என்ன நடக்கும்

தேவையற்ற செயல்பாடுகள், அபராதங்கள், அலைச்சல்கள் ஆகியவற்றை தவிர்க்க, காலக்கெடுவுக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது புத்திசாலித்தனமானதாகும்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 05:50 PM IST
  • 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.
  • காலக்கெடு முடிவதற்குள் இந்த பணியை செய்து முடிக்க அனைவரும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
  • ஐ.டி.ஆர் தாக்கல் செய்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.
ITR filing: ஐடிஆர் தாக்கல் செய்ய 2 நாட்களே உள்ளன, காலக்கெடுவை மிஸ் செய்தால் என்ன நடக்கும் title=

ITR Filing FY 2020-21: 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், காலக்கெடு முடிவதற்குள் இந்த பணியை செய்து முடிக்க அனைவரும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தேவையற்ற செயல்பாடுகள், அபராதங்கள், அலைச்சல்கள் ஆகியவற்றை தவிர்க்க, காலக்கெடுவுக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது புத்திசாலித்தனமானதாகும். 

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, 2020-21 நிதியாண்டுக்கான அனைத்து வருமான வரிக் கணக்கையும் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. இந்த ஆண்டில், நிதி ஆண்டு 2020-21 (FY 2020-21)-க்கான வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2021-22 ஆக இருக்கும்.

காலக்கெடு முடிவதற்குள் அனைவரும் தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றாலும், ஒருவர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால், அபராதம் செலுத்தி அதை செய்து முடிக்கலாம். 

ஐ.டி.ஆர் தாக்கல் செய்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இதோ:

- ஐடிஆர்-ஐ ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் தாக்கல் செய்யலாம். 

- ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டாலோ அல்லது தாமதமாக தாக்கல் செய்தாலோ ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். 

- முன்பு, ITR ஐ தாமதமாக தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. 

- தற்போது இந்த அபராதம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. 

- உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், நீங்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். 

- கூடுதலாக, வரி (Tax) விதிக்கக்கூடிய வரம்பிற்குக் கீழே உங்கள் வருமானம் இருந்து, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால் அபராதம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. 

- இருப்பினும், இது சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டது.

ALSO READ | Good News! 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாய் வருமானம் இருந்தாலும், வரி கட்டவேண்டாம்! திட்டமிடுங்கள் 

ஏராளமான வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை அரசாங்கம் இரண்டு முறை நீட்டித்துள்ளது. வருமான வரித் துறையானது வரி செலுத்துவோரின் ஐடிஆர் தாக்கல் குறித்து பலமுறை வழிகாட்டும் விளம்பரங்களையும் வழங்கியது.

இது தொடர்பான மற்றொரு செய்தியில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மதிப்பீட்டு ஆண்டு 2020-21 (AY 2020-21)-க்கான e-filed ITR களின் சரிபார்ப்புக்கு ஒரு முறை தளர்வு அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஐ.டி.ஆர்-வி படிவம் அல்லது நிலுவையில் உள்ள இ-சரிபார்ப்பு ஆகியவை காரணமாக இன்னும் சரிபார்ப்பு நிறைவடையாத ஐ.டி.ஆர்-களுக்கு இது பொருந்தும். 

CBDT, AY 20-21க்கான ITR ரீஃபண்ட் தாக்கல் செய்யும் (ITR Refund filing ) செயல்முறையை 28 பிப்ரவரி 2022 வரை நீட்டித்துள்ளது.

ALSO READ | வங்கியில் இருந்து பணம் எடுத்தால் TDS செலுத்த வேண்டும்! விதிகள் என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News