சென்னை: தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது!! தென் மாவட்டங்களுக்கு இடையிலான ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கமாகும். அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இந்த கூட்டம் பன்மடங்கு அதிகரிப்பதும் வழக்கமாக நடப்பதே. அத்தகைய நிலையில், இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே ஒரு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சென்னை எழும்பூர் - குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் (வண்டி எண் 16127/16128) கூடுதலாக 2 பெட்டிகள் (ஒரு ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் ஜெனரல் இரண்டாம் வகுப்பு) நிரந்தரமாக சேர்க்கப்பட்டு தரம் உயர்த்தப்படுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்டிகளின் எண்ணிக்கை 21 ல் இருந்து 23 ஆக அதிகரித்துள்ளது. இது இன்று முதல் (செப்டம்பர் 03) நடைமுறைக்கு வருகிறது.
Chennai Egmore - Guruvayur Express is now permanently augmented with extra sleeper and General Class coaches for a convenient journey.
#SouthernRailway #TrainAugmentation #RailwayComfort pic.twitter.com/JSQS0Gjr52— Southern Railway (@GMSRailway) September 2, 2023
இந்த பெட்டிகள் சேர்க்கப்பட்ட பிறகு, இப்போது இதில் ஒரு ஏசி டயர் -II, இரண்டு ஏசி டயர்-III, 11 ஸ்லீப்பர் வகுப்புகள், ஏழு ஜெனரல் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டி (மாற்றுத்திறனாளிகளுக்கானது) ஆகியவை இருக்கும் என தெற்கு ரயில்வே (எஸ்ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு பொன்னான வாய்ப்பு தந்த ரயில்வே.. இதோ முழு தகவல்
மேலும், 07695/07696 செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. செகந்திராபாத்தில் இருந்து தொடங்கும் ரயில் எண் 07695 ராமநாதபுரம் (வாராந்திர சிறப்பு) மற்றும் செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமைகளில் 21.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 23.45 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும் சேவை செப்டம்பர் 06, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்படும் (4 சேவைகள்).
ரயில் எண் 07696 ராமநாதபுரம் - வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து 09.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில், செப்டம்பர் 08, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (4 சேவைகள்) இயக்கப்படும். மேற்குறிப்பிட்ட சிறப்புக் கட்டண சிறப்பு வசதிகளுக்கான முன்பதிவு தெற்கு ரயில்வே முனையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கான சில முக்கிய குறிப்புகள்
அடிக்கடி ரயிலில் (Indian Railways) பயணிக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகலாம். ரயில் பயணத்தின் போது நீங்கள் செய்யும் சிறிய தவறும் கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது பொதுவாக ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். இரவில் இரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கான விதிகளை ரயில்வே சமீபத்தில் மாற்றியுள்ளது.
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, தங்கள் இருக்கை, பெட்டி அல்லது கோச்சில் எந்தப் பயணியும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, உரத்த ஒலியுடன் பாடல்களைக் கேட்கவோ முடியாது. பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கவும், பயணத்தின் போது நிம்மதியாக உறங்கவும் ரயில்வே இந்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பல பயணிகள் தங்கள் கோச்சில் தங்களுடன் பயணிப்பவர்கள் தொலைபேசியில் சத்தமாகப் பேசுகிறார்கள் என்றும் இரவு வெகுநேரம் வரை பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அடிக்கடி ரயில்வேயிடம் புகார் கூறுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ரயில்வேயின் எஸ்கார்ட் ஊழியர்கள் அல்லது பராமரிப்பு ஊழியர்களும் சத்தமாக பேசுவதாக சில பயணிகளிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. இதுதவிர பல பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் மின்விளக்குகளை எரிய வைப்பதால் சக பயணிகளின் தூக்கம் கலைகிறது. இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே புதிய விதியை வகுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பயணிகள் விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடிச்சது மெகா ஜாக்பாட்! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ