2 வாழைப்பழம் 442 ரூபாய் என பில் போட்ட ஓட்டலுக்கு 25 ஆயிரம் அபராதம்!

இரண்டு வாழைப்பழங்களை 442 ரூபாய்க்கு விற்பனை செய்த 5 நட்சத்திர ஓட்டலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு..!

Last Updated : Jul 28, 2019, 01:16 PM IST
2 வாழைப்பழம் 442 ரூபாய் என பில் போட்ட ஓட்டலுக்கு 25 ஆயிரம் அபராதம்! title=

இரண்டு வாழைப்பழங்களை 442 ரூபாய்க்கு விற்பனை செய்த 5 நட்சத்திர ஓட்டலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு..!

கடந்த திங்கட்கிழமையன்று, விஸ்வரூபம் படத்தில் வில்லனா நடித்திருந்த நடிகர் ராகுல் போஸ் சண்டிகரில் உள்ள ஜேடபிள்யூ மேரியட்(JWMarriott) என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அங்கு அவர் 2 வாழைப்பழங்களை வாங்கியதற்கு ஜிஎஸ்டியோடு சேர்த்து 442 ரூபாய்க்கு பில் கொடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராகுல் போஸ். 

சொகுசு ஹோட்டலில் வாழைப்பழத்திற்காக வசூலிக்கப்பட்ட தொகை குறித்து புகார் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த தில் தடக்னே டோ (Dil Dhadakne Do) நடிகருக்கு ஒரு சொகுசு ஹோட்டலில் இரண்டு வாழைப்பழங்களுக்கு 442 ரூபாய் வசூலிக்கப்பட்டது என்பது டிவிட்டரை சிறிப்பில் மூள்கவைத்த அதே நேரம் கோபப்படுத்திய ஒரு செய்தி. இவர் புகார் அளித்த மாதிரியான வீடியோ வைரலானதை தொடர்ந்து, இப்போது ​​அவரது வீடியோவை பார்த்த மக்கள் வெவ்வேறு விஷயங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவங்களை டிவிட்டரில் 'ராகுல் போஸ் தருணங்கள்' (Rahul Bose Moments) என பகிர்ந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், விதிகளை மீறி ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றான வாழைப்பழத்திற்கு வரி வசூலித்ததற்காக ஜேடபிள்யூ மேரியட் ஓட்டலுக்கு கலால் மற்றும் வரிவிதிப்பு துறை அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News