Cutlery Business: குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் தரும் சூப்பர் பிஸினஸ்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பலர் வேலை இழந்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், குறைந்த செலவில், அதிக லாபம்  தரும் வணிகத்தை செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2021, 11:36 AM IST
  • கட்லரி வணிகம் உங்களுக்கு பம்பர் லாபத்தைத் தரும்
  • இந்த வணிகத்திற்கு மத்திய அரசின் முதரா திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
  • கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பலர் வேலை இழந்துள்ளனர்.
Cutlery Business: குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் தரும் சூப்பர் பிஸினஸ்  title=

கொரோனா வைரஸ் (Coronavirus)  நெருக்கடிக்கு மத்தியில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்.  வருமான ஆதாரத்தை இழந்த மக்களுக்கு வாழ்கையே போராட்டமாக மாறியுள்ளது. அத்தகைய நேரத்தில், பணம் சம்பாதிக்க ஒரு லாபகரமான தொழிலைத் தொடங்கலாம். அதுவும் குறைந்த செலவில் முதலீடு செய்து பம்பர் லாபம் பெற முடியும். இதில் உள்ள சிறப்பு அம்சம் இந்த தொழிலை தொடங்க நீங்கள் மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் உதவியும் பெறலாம்

லாபம் கொழிக்கும் கட்லரி உற்பத்தி 

குறைந்த அளவில் பணம் போட்டு, நல்ல பணம் சம்பாதிப்பதற்கான வழியை  உலோகத்திலிருந்து தயாரிக்கப்படும் கட்லெரி அதாவது ஸ்பூன்கள், போர்க்குகள் (Manufacturing Of Cutlery)  உற்பத்தி பிரிவு ஒன்றை நீங்கள் தொடங்கலாம். இதற்காக, நீங்கள் அரசாங்கத்தின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

இந்த தயாரிப்புகள் லாபத்தைத் தரும்

அனைத்து ஹோட்டல்களிலும், வீடுகளிலும், கட்லரிக்கான தேவை அதிகம் இருப்பதால், நிச்சயமாக இந்த வணிகம் உங்களுக்கு அதிக லாபம் தரும். இந்த வணிகத்தின் கீழ், நீங்கள் கட்லரி மட்டுமல்லாது, கை கருவிகள் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் சில முக்கியமான கருவிகள் வரை பலவற்றை செய்யலாம். 

இதை அமைக்க ரூ .1.8 லட்சம் செலவாகும். வெல்டிங் செட், பஃபிங் மோட்டார், துளையிடும் இயந்திரம், உட்பட பிற கருவிகள் மற்றும் இயந்திரங்களும் இதில் அடங்கும். இது தவிர, மூலப்பொருட்களுக்காக சுமார் 1,20,000 ரூபாய் தேவைப்படும். இது தவிர, வேலை செய்பவர்களின் சம்பளம் போன்றவற்றுக்கு மாதத்திற்கு 30 ஆயிரம் செலவாகும். ஒட்டுமொத்தமாக 3 அல்லது 3.3 லட்சம் செலவாகும்.

ALSO READ | IRCTC Booking Update: மோசடிகளை தடுக்க முக்கிய மாற்றம் விரைவில்.!!

உங்களிடம் 1.14 லட்சம் ரூபாய் இருந்தால் போதும்
இந்த வணிகத்தை தொடக்க உங்களிடன் ரூ .1.14 லட்சம் இருந்தால் போது.  மீதமுள்ள தொகைக்கு நீங்கள் அரசாங்கத்தின் உதவியைப் பெறலாம். அரசாங்கத்தின் முத்ரா திட்டத்தின் கீழ், இந்த வணிகத்திற்கான கடன் வசதி உங்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, குறைந்த செலவில் நல்ல இலாபம் இருக்கும் இதுபோன்ற ஒரு தொழிலை நீங்கள் செய்ய விரும்பினால், இது ஒரு சிறந்த வழி.
 விண்ணப்பிக்கும் முறை

இந்த கடனுக்கு நீங்கள் பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் எந்த வங்கியிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களுடனும் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும், அதில் பெயர், முகவரி, வணிக முகவரி, கல்வி, தற்போதைய வருமானம் மற்றும் எவ்வளவு கடன் தேவைப்படுகிறது போன்ற விவரங்களை நிரப்பி வங்கியில் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

ALSO READ | “இந்த” ஸ்மார்ட்போன்கள் இனி இந்தியாவில் கிடைக்காது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News