DigiLocker மூலம் Aadhaar Card-ஐ நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்: முழு விவரம் இதோ!!

ஒரு அட்டைதாரர் நான்கு எளிய படிகளில் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யக்கூடிய ஐந்து வழிகளில் டிஜிலோக்கர் ஒன்றாகும். இது மிகவும் எளிய வழியாகவும் பாதுகாப்பான வழியாகவும் பார்க்கப்படுகின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 15, 2021, 10:37 PM IST
  • ஆதார் அட்டைதாரர் நான்கு எளிய படிகளில் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
  • டிஜிலொக்கர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) இனைந்துள்ளது.
  • டிஜிலாக்கர் கணக்கைப் பயன்படுத்தி OTP மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
DigiLocker மூலம் Aadhaar Card-ஐ நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்: முழு விவரம் இதோ!!   title=

Aadhaar Card Download by OTP On DigiLocker Account: ஆதார் எண் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணாகும். இதை OTP-ஐப் பயன்படுத்தி ஐந்து வெவ்வேறு வழிகளில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த வழியில், ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யும் செயல்பாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதார் அட்டைதாரர் OTP ஐப் பெறுகிறார்.

டிஜிலாக்கர் கணக்கில் ஆதார் அட்டை பதிவிறக்கம்

ஒரு அட்டைதாரர் நான்கு எளிய படிகளில் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யக்கூடிய ஐந்து வழிகளில் டிஜிலோக்கர் (DigiLocker) ஒன்றாகும். இது மிகவும் எளிய வழியாகவும் பாதுகாப்பான வழியாகவும் பார்க்கப்படுகின்றது.

OTP மூலம் ஆதார் அட்டை பதிவிறக்கம்

டிஜிலொக்கர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) இனைந்ததால், அட்டைதாரர்கள் OTP மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது சாத்தியமாகியுள்ளது. இதனால் ஆதார் அட்டைதாரர்கள் இனி தங்கள் டிஜி லாக்கர் அகௌண்டை ஆதாருடன் இணைகக் முடியும்.

டிஜிலாக்கர் கணக்கு என்றால் என்ன?

இது டிஜிட்டல் வடிவத்தில் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல், சேமித்தல், பகிர்வு மற்றும் சரிபார்ப்பு செய்வதற்கான க்ளௌட் சார்ந்த தளமாகும். இது இந்திய குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்ட டிஜிட்டல் லாக்கர்களில் மின்னணு நகல்களை வழங்க பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு உதவுகிறது.

ALSO READ: 7th Pay Commission: இந்த மத்திய ஊழியர்களுக்கு DA, HRA, TA சேர்த்து ரூ .2 லட்சம் வரை சம்பளம்

ஆதார் பதிவிறக்கத்தின் படிப்படியான வழிகாட்டி

டிஜிலாக்கர் கணக்கிலிருந்து OTP மூலம் ஆதார் அட்டை (Aadhaar Card) பதிவிறக்கம்:

1] டிஜிலோக்கரின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான digilocker.gov.in –ல் உள்நுழைந்து, ‘Sign In’பட்டனைக் கிளிக் செய்யவும்.

2] உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்கள் டிஜிலாக்கர் கணக்கில் உள்நுழைய வேண்டும். பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெற ‘Verify’ பொத்தானைக் கிளிக் செய்ய்வும்.

3] உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு 'Verify OTP' பொத்தானைக் கிளிக் செய்யவும்

4] ‘Issued Document’ பக்கம் தோன்றும். இப்போது நீங்கள் ‘Save’ ஐகானைப் பயன்படுத்தி உங்கள் e-Aadhaar-ஐப் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள நான்கு எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, டிஜிலாக்கர் கணக்கைப் பயன்படுத்தி OTP மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். 

ALSO READ: 7th Pay Commission: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள், DA-வுக்காக ஜூலை வரை காத்திருக்க வேண்டாம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News