சாதாரண ரயில் டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் செல்லலாம்; தெற்கு ரயில்வே

குறிபிட்ட தூரம் செல்லும் ரயில்களில் சாதாரண ரயில் டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், அவை குறிப்பிட்ட சில ரயில்களில் மட்டுமே.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 13, 2022, 02:23 PM IST
  • முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்
  • முன்பதிவு டிக்கெட்டில் பயணிக்கலாம்
  • தெற்கு ரயில்வேயின் சூப்பரான் திட்டம்
சாதாரண ரயில் டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் செல்லலாம்; தெற்கு ரயில்வே title=

ரயில் பயணம்

தொலை தூர பயணங்களுக்கு பேருந்து, கார் உள்ளிட்டவை காட்டிலும் ரயில் பயணங்கள் மிகவும் எளிதாக இருக்கிறது. முன்பதிவு செய்துவிட்டால் எந்த தொந்தரவும் இல்லாமல் சென்று வரலாம். அதேநேரத்தில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் அன் ரிசர்வ் பெட்டியில் பயணிப்பார்கள். பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்காக குறிப்பிட்ட தொலைவு செல்பவர்கள் எல்லாம் கூட்ட நெரிசல் காரணமாக அன் ரிசர்வ் பெட்டியில் பயணிக்க முடியாத சூழல் இருக்கிறது. மேலும், முன்பதிவு பெட்டியில் பயணித்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

தெற்கு ரயில்வே புதிய திட்டம்

இதனை கருத்தில் கொண்ட தெற்கு ரயில்வே, அன் ரிசர்வ் பெட்டியில் பயணிக்க முடியாதவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் வகையில் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் புதிய திட்டம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டம் தான். ஆனால், பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதாவது, டி ரிசர்வ்டு (De-Reserved) டிக்கெட் திட்டம். இந்த டிக்கெட் சாதாரண டிக்கெட்டை விட 20 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்க வேண்டும். இந்த டிக்கெட் எடுத்தவர்கள், குறிப்பிட்ட ரயிலின் முன்பதிவு பெட்டியில் அதிகபட்சமாக 100 கி.மீ வரை பயணிக்கலாம். முன்பதிவு செய்யாமல், இந்த டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணிக்க முடியும். டி ரிசர்வ்டு பெட்டி இணைக்கப்பட்ட ரயில்களில் மட்டுமே இந்த டிக்கெட் செல்லும்.  

மேலும் படிக்க | தேச விடுதலைக்கான ஒட்டுமொத்த பெருமையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமா?

எந்தெந்த ரயில்கள்? தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரயில்களில் எஸ்.11, 12 ஆகிய இரு பெட்டிகளில் திருநெல்வேலியில் இருந்து கொல்லம் வரை இரு மார்க்கங்களிலும் பயணிக்கலாம். எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் எஸ்.12, 13 பெட்டிகளில் மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை இரு மார்க்கத்திலிலும் 'டிரிசர்வ்டு' டிக்கெட் எடுத்து, இந்த இரு பெட்டிகளிலும் மக்கள் பயணிக்கலாம். மங்களூர் - எழும்பூர் விரைவு ரயிலில், திருச்சி முதல் மங்களூர் வரை எஸ்.7, எஸ்.8, எஸ்.9, எஸ்.10 ஆகிய பெட்டிகளில் பயணிக்கலாம். அதே சமயத்தில், மங்களூரில் இருந்து எழும்பூருக்கு இந்த ரயில் வரும் போது, எஸ்.10 பெட்டியில் மட்டுமே பயணிக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள ரயில்கள்

தூத்துக்குடி - மைசூர் இடையே இயக்கப்படும் ரயிலில், தூத்துக்குடி முதல் மதுரை வரை எஸ்.4, எஸ்.10, எஸ்.11, எஸ்.13 பெட்டிகளில் பயணிக்கலாம். கன்னியாகுமரி - பெங்களூர் ரயிலில், கன்னியாகுமரி முதல் எர்ணாகுளம் வரை எஸ்.6, 7 ஆகிய பெட்டிகளில் பயணிக்கலாம். நாகர்கோவில் விரைவு ரயிலில் எஸ்.11, எஸ். 12 பெட்டிகளில் திருநெல்வேலி முதல் நாகர்கோவில் வரை சாதாரண டிக்கெட்டில் பயணிக்கலாம்.

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News