புதுடெல்லி: கிரகணத்தால் ஒருவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு ஜாதகத்தில் சூரியனும் ராகுவும் சேர்ந்தால் கிரஹண தோஷம் உருவாகிறது. இந்த சூரிய கிரகணத்தன்று கிரகண தோஷங்கள் விலக செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரங்கள்.
டிசம்பர் 4ம் தேதி சனிக்கிழமை, இன்று சூரிய கிரகணம் (Solar Eclipse) நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி கிரகணமான இன்று, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கிரகணம் இருக்கும்.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்றாலும், ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ராகு மற்றும் கேதுவின் அசுப பலன்களால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில் ஒருவரின் ஜாதகத்திலும் ராகு-கேதுவின் அசுப பலன்களால் ஒருவர் கிரகண தோஷத்தை அனுபவிக்கலாம்.
கிரகண தோஷம் என்பது, நமது வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ALSO READ:ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு உச்சகட்ட கவனம் தேவை
சூரிய கிரகண தோஷ பாதிப்பு
ஒருவரின் ஜாதகத்தில் சூரிய கிரகண தோஷம் இருந்தால் தந்தையுடன் விரிசல் ஏற்படும். இதனுடன், உடல்நலக் கோளாறுகளும் அடிக்கடி ஏற்படும். சூரிய கிரகண தோஷத்தால் எலும்பு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படலாம்.
அதுமட்டுமின்றிம் அரசு தொடர்பான பணிகளிலும் பிரச்னைகள் வரத் தொடங்குகின்றன. பணியிடத்தில் அதிகாரிகளின் கோபத்தையும் சந்திக்கச் செய்யும் கிரகண தோஷம், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கச் செய்யும்.
ஜோதிட சாஸ்திரப்படி, சூரிய கிரகண நாளன்று கிரகண தோஷங்கள் விலக சில முக்கிய ஆனால் சுலபமான நிவாரணங்களைச் செய்யலாம்.
ஜாதக கிரகண தோஷ பரிகாரம் (Grahan Dosh Remedy)
ஜாதகத்தில் பித்ரு தோஷம், கிரகண தோஷம் இருந்தால் சூரிய கிரகண நாளில் கருப்பு எள், வெல்லம், கோதுமை ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். ஜாதகத்தில் கிரகண தோஷம் (Surya Grahan Dosh) இருப்பவர்கள் வெல்லம் சாப்பிடக் கூடாது.
ஜாதகத்தில் சூரிய கிரகண தோஷம் ஏற்படாமல் இருக்க அரச மரத்தை பரமாரிக்க வேண்டும், தினமும் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அரச மரத்தை நட்டு வளர்த்து வந்தால், கிரஹண தோஷமே ஏற்படாது.
READ ALSO | சூரிய கிரகணத்தின் போது மறந்தும் இவற்றை செய்யாதீர்கள்: ஜாக்கிரதை!!
சூரிய கிரகண தோஷத்தைப் போக்க யாரிடமும் இலவசமாக எதையும் பெறக்கூடாது. பணம் கொடுக்காமல் எதையும் வாங்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் செய்வதும் கிரகண தோஷத்தைப் போக்கும்.
கிரஹண தோஷம் அல்லது பித்ரு தோஷம் இருந்தால், 6 தேங்காய்களை தலையை சுற்றிவிட்டு, அவற்றை நெருப்பில் போட்டு எரித்துவிடவும்.
ஜாதகத்தில் சூரிய கிரகண தோஷம் நீங்க, ஆதித்ய ஹிருதய் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.
சூரிய உதயத்திற்கு முன், குளித்துவிட்டு, சூரிய உதயத்தின் போது செப்புப் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றி ஆதவனை வழிபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ:செவ்வாய் பெயர்ச்சி: இந்த 6 ராசிகாரர்களுக்கு பணம் வந்து கொட்டும், மகிழ்ச்சி ஏற்படும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR