சூரிய கிரகணத்தின் போது மறந்தும் இவற்றை செய்யாதீர்கள்: செய்தால் அவதிதான், ஜாக்கிரதை!!

நிபுணர்களின் கூற்றுப்படி, சனிக்கிழமை சூரிய கிரகணத்தின் போது அசுப யோகம் இருக்கும். இந்த தாக்கம் காரணமாக சூரியன் பலவீனமாகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 3, 2021, 08:31 AM IST
  • சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • கிரகணத்தின் போது, ​​சூரியனின் எதிர்மறை கதிர்கள் மனதின் திறனையும் பாதிக்கும்.
  • கிரகணத்தைப் பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக சன்கிளாஸ் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சூரிய கிரகணத்தின் போது மறந்தும் இவற்றை செய்யாதீர்கள்: செய்தால் அவதிதான், ஜாக்கிரதை!!

Last Solar Eclipse of 2021: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4, சனிக்கிழமை அன்று நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, இது மார்கழி மாத சனி அமாவாசை நாளில் நடைபெறுகிறது. இது தவிர ராகுவின் தாக்கமும் இந்த கிரகணத்தில் இருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, சனிக்கிழமை சூரிய கிரகணத்தின் போது அசுப யோகம் இருக்கும். சூரிய கிரகணத்தின் போது, ​​ராகு மற்றும் கேதுவால் சூரியன் துன்புறுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த தாக்கம் காரணமாக சூரியன் பலவீனமாகிறது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் தெரியும்.

இந்தியாவில் கிரகணம் தென்படாது

இந்த சூரிய கிரகணம் (Solar Eclipse)  4 டிசம்பர் 2021 அன்று காலை 10:59 முதல் மாலை 03:07 வரை இருக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்பதால், அதன் சூதக் காலமும் இங்கு செல்லாது. இந்த சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அண்டார்டிகா, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் போன்ற தெற்கு அரைக்கோள நாடுகளில் தெரியும்.

இந்த கிரகணத்தின் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். கிரண காலத்தின் தாக்கம் பல வழிகளில் நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. பொதுவாக, கிரகணமானது மக்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தக்கூடும்

சூரிய கிரகணத்தின் போது பெண்களின் உடலில் ஹார்மோன் (Hormone) மாற்றங்கள் ஏற்படலாம். இது தவிர, சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் காய்கறிகளை வெட்டுவது, உறங்குவது, பப்பாளி பழத்தை சுடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். நல்ல சிந்தனைகளை தரும் ஆன்மீக நூல்களைப் படித்து தங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். இதன் மூலம், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல குணங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் பசுவின் சாணத்தை லேசாக வயிற்றில் தடவி சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

ALSO READ:ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு உச்சகட்ட கவனம் தேவை 

மனதின் திறன் பாதிக்கப்படுகிறது

கிரகணத்தின் போது, ​​சூரியனின் எதிர்மறை கதிர்கள் மனதின் திறனையும் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் எந்த ஒரு முக்கிய வேலையும் செய்ய வேண்டாம். மனதளவில் கடவுளை ஜபிப்பது சிறந்ததாக கருதப்படுகின்றது.

கண்களில் மோசமான விளைவு

கிரகணத்தைப் பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக சன்கிளாஸ் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள். சூரிய கிரகணத்தின் போது வெறும் கண்களால் (Eyes) சூரியனைப் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல என்று நம்பப்படுகிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது தீங்கு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

உணவு கெட்டு போகலாம்

கிரகணத்தின் போது எதையும் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் கிரகணத்தின் தாக்கம் உணவிலும் உண்டாகிறது. ஆகையால், கிரகணத்தின் போது உணவு உண்ணவோ அல்லது சமைக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் சூரிய கிரகணத்தால் உணவு விரைவில் கெட்டு விடும். ஆனால் பால், நெய், எண்ணெய், பனீர், ஊறுகாய், மார்மலேட் மற்றும் பிற உணவுப் பொருட்களில் எள், தர்பை அல்லது துளசி இலைகளைப் போடுவதால் கிரகண காலத்தில் உணவுப்பொருட்களில் தோஷம் ஏற்படாமல் தவிர்க்கலாம். உலர் உணவுகளில் எள் அல்லது தர்பை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

நாடித்துடிப்பு விகிதத்தில் தாக்கம்

பல நம்பிக்கைகளின்படி, சூரியனின் கதிர்கள் நம் உடலுடன் தொடர்புகொண்டுள்ளன. சூரியனின் சுழற்சி எப்போதும் உடலை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் வானியல் அடிப்படையில் நமது உடல் நுட்பமானது. எனவே இந்த மாற்றம் இருக்கும். அதை நம்மால் உணரக்கூட முடிவதில்லை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ:செவ்வாய் பெயர்ச்சி: இந்த 6 ராசிகாரர்களுக்கு பணம் வந்து கொட்டும், மகிழ்ச்சி ஏற்படும்

More Stories

Trending News