2 நாட்களில் புதன் வக்ர பெயர்ச்சி; 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம்

மே 10 முதல் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க ஆரம்பிப்பார். தற்போது ஏற்படவுள்ள புதனின் பிற்போக்கு இயக்கத்தால், எந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது என இந்த பதிவில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2022, 10:21 AM IST
  • புதனின் வக்ர பெயர்ச்சி சுப பலனை தரும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கும் சுபமான பலன்களை தரும்.
2 நாட்களில் புதன் வக்ர பெயர்ச்சி; 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் title=

புதன் வக்ர பெயர்ச்சி: ஜோதிடத்தின் படி, ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் தலைகீழ் இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. மேலும் இந்த மாற்றங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. செல்வம், புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவற்றுக்கு காரணமான புதன் கிரகம் வரும் மே 10-ம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க ஆரம்பித்து, ஜூன் 3 ஆம் திகதி வக்ர நிவர்த்தியாகி முற்போக்கு நிலையில் மாறி பயணிப்பார். இது ராசிக்காரர்களுக்கு நல்ல பலனையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்தும்.

ஒரு கிரகம் எப்பொழுது பிற்போக்கு நிலையில் இருக்கிறதோ, அதாவது, அது எதிர் திசையில் நகரத் தொடங்கும் போது, ​​அதன் தாக்கத்தின் தீவிரம் அதிகரிக்கிறது. அதனால்தான் கோள்களின் தலைகீழ் இயக்கத்தைக் கண்டு மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள். இருப்பினும், கிரகங்களின் தலைகீழ் இயக்கம் ஒரு அசுப விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அது மங்களகரமானது என்பதை நிரூபிக்கிறது. தற்போது ஏற்படவுள்ள புதனின் பிற்போக்கு இயக்கத்தால், எந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது என இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள் 

இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி சுபமானது

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த 23 நாட்கள் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும். பழைய முதலீடுகள் நல்ல பலனைத் தரும். இந்த நேரம் தொழிலுக்கு பொன்னான வாய்ப்பை தரும். நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது பெரிய பதவி உயர்வு பெறலாம். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் பல நன்மைகளைத் தரும்.

கடகம்: புதனின் வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு தரும். அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வந்து குவியும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த நேரம் வளர்ச்சி மற்றும் வருமானத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி வருமானத்தை அதிகரிக்கும். பல வழிகளிலும் பலன் அடைவார்கள். சம்பளம் உய்ர்வு கூடும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். முதலீடு நல்ல பலனைத் தரும். மொத்தத்தில், இந்த நேரம் நிதி நிலைமையில் பலத்தைக் கொண்டுவரும். புதிய விஷயங்களைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும், பல அதிசயங்கள் நடக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News