எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையை துவைக்க வேண்டும்?

Pillow Cover: பெட்ஷீட்களை அடிக்கடி துவைப்பது போல் தலையணை உறைகளையும் துவைக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

Written by - RK Spark | Last Updated : Jun 23, 2024, 12:06 PM IST
  • தலையணை உறையை அடிக்கடி துவக்க வேண்டும்.
  • மாற்றவில்லை என்றால் பின்விளைவுகள் ஏற்படும்.
  • ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையை துவைக்க வேண்டும்? title=

Pillow Cover: தலையணையை வைத்து தூங்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. ஒரு சிலருக்கு இரண்டு தலையணை இல்லை என்றால் தூக்கமே வராது. தலையணை வைத்து தூங்குவது பெரிய குற்றம் இல்லை என்றாலும் அந்த தலையணையை பராமரிப்பது மிகவும் அவசியம். பெட்ஷீட்களை அடிக்கடி துவைப்பது போல், தலையணை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும். அப்படி நீண்ட நாட்கள் மாற்றாமல் இருந்தால், பல உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தலையணை உறையை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேலும் படிக்க | மாம்பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

மருத்துவர்களின் அறிவுரைப்படி, தலையணை உறைகளை ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும், அதாவது வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் பயன்படுத்தும் தலையணை உறைகளை மாற்ற வேண்டும். தலையில் இருக்கும் எண்ணெய் மற்றும் தூசிகள் இரவு தூங்கும் போது தலையணையில் படிக்கிறது. அதே போல உங்கள் வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் இருந்தால் அதன் முடிகள் தலையணை உறையில் ஒட்டி கொள்ள அதிக வாய்ப்புள்ளது. எனவே வாரம் முறை கண்டிப்பாக தலையணை உறைகளை மாற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

அழுக்கு நிறைந்த தலையை உறைகளை பயன்படுத்தினால்?

அழுக்கு தலையணை உறைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சரும அலர்ஜி, முகத்தில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுத்தம் தொடர்பான விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது. நீண்ட நாட்கள் ஒரே தலையணை உறைகளை பயன்படுத்தும் போது அதில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உருவாக தொடங்குகின்றன, இது உங்கள் சருமத்தை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் தினசரி இரவு தூங்கும் முன்பு தலையணையை நன்கு தட்டிவிட்டு தூங்குவது நல்லது.

முடியின் சுகாதாரம்

தலையணை உறைகளை அடிக்கடி மாற்றுவது முடியின் ஆரோக்கியத்தை அதிகப்படுகிறது மற்றும் தூசி தங்காமல் பார்த்து கொள்கிறது. உங்களுக்கு ஏதேனும் தொற்றுநோய்கள் இருக்கும் பட்சத்தில் வாரத்தில் இரண்டு முறை தலையணை உறைகளை மாற்றுவது நல்லது. அப்படி இல்லாத பட்சத்தில் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைகளை மாற்ற வேண்டும். இது தவிர, தலையணையை மாதந்தோறும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். தலையணை உறையுடன், தலையணையின் தூய்மையையும் கவனிக்க வேண்டும்.

மேலும் படிக்க |  தமிழகம் முழுக்க பரவலான மழை! இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News