தள்ளாத வயதிலும் தடைக்காலத்தில் சாதிக்கும் பாட்டி.. வியக்கும் நெட்டிசன்கள்!

105 வயது நிரம்பிய மன் கவுருடன் மிலிந்த் சோமன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 6, 2021, 11:13 AM IST
தள்ளாத வயதிலும் தடைக்காலத்தில் சாதிக்கும் பாட்டி.. வியக்கும் நெட்டிசன்கள்! title=

105 வயது நிரம்பிய மன் கவுருடன் மிலிந்த் சோமன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

உலக சாம்பியன் தடகள வீரரும், பிங்காதோனின் (Man Kaur, mascot of Pinkathon) நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனையுமான, 105 வயது நிரம்பிய மன் கவுருடன் மிலிந்த் சோமன் (Milind Soman) வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் தனது 93 வயதில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு 105 வயதிலும் அசராமல் ஓடுகிறார் என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

நடிகர் மிலிந்த் சோமன், உடற்பயிற்சி, ஓட்டப்பந்தயம், உடல் ஆரோக்கியம் என அனைத்தையும் பேணிக் காப்பதுடன், அடுத்தவர்களுக்கும் உதாரணமாக இருந்து வருகிறார். இதனாலேயே அவரை இன்ஸ்டாகிராமில் (Instagram) ஏராளமானோர் பின்பற்றி வருகிறார்கள். இவர் தான், இந்தியாவில் பெண்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய பிங்காதான் ஓட்டப்போட்டியை கொண்டு வந்தவர். 

ALSO READ | குதூகலத்துக்கு வயது தடையேயில்லை! 83 வயதிலும் குத்தாட்டம் போடும் முன்னாள் முதலமைச்சர்

இந்நிலையில், மிலிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உலக சாம்பியன் தடகள வீராங்கனையும், பிங்காதோனின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனையுமான 105 வயதான மன் கவுருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவருடன் ஓடும் வீடியோவையும் (Video) பகிர்ந்துள்ளார்.

சுறுசுறுப்பான வாழ்க்கை 45 வயதில் முடிந்துவிடுகிறது என சிலர் கூறுகிறார்கள். அந்த வயதுக்கு மேல் தங்களால் எதுவும் செய்ய முடியாது என ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் இந்த பாட்டியின் கதையே வேறு. 93 வயதில் ஓட்டப் பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்து, தற்போது அவரது 105வது வயது வரையிலும் ஓடிக் கொண்டிருக்கிறார். அவர் வசம் பல உலக சாதனைகள் உள்ளது. இவருக்கு உயரிய விருதான ‘நரி சக்தி புரஷ்கார்’ விருதை வழங்கி ஜனாதிபதி கவுரவித்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளில் கலந்து கொள்ளும் கவுர், தொடர்ந்து தங்க பதக்கங்களாக வாங்கி குவித்து வருகிறார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News