கலபார்: 'Miss Africa 2018' அழகி போட்டி சமீபத்தில் நடந்த முடிந்தது. மகிழ்ச்சியில் முடிய வேண்டிய இந்நிகழ்ச்சி, சற்று சோகமான தருணத்துடன் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய காங்கோ நாட்டு அழகி டார்காஸ் கேஸிண்டே, தனது வெற்றி கீரிடத்தினை பெற்றுக்கொள்ளும் தருவாயில், ரசிகர்கள் எழுப்பிய உற்சாக தீப்பொறிகள் அவரது தலையில் பட்டு, தீ-மூட்டி சென்றது. இதனால் மேடையிலேயே டார்காஸ் கேஸிண்டே-வின் தீ பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. டார்காஸை விழா குழுவினர் அலங்கார அணிவகுப்பு பிரிவில் வெற்றிப் பெற்றவர் என அறிவித்த போது, சக போட்டியாளரை டார்காஸ் அனைத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் தீப்பொறிகளை பறக்கவிட்டனர். இதனால் தார்காஸின் தலை முடியில் பட்ட தீ, அவரது தலையினை எரித்தது.
Wow this happened after Miss Congo won #MissAfrica2018Calabar pic.twitter.com/PBMBC3IdQa
— Habib Lateef O. (@SIREHABBIIBB) December 28, 2018
எனினும் விழா குழு ஒருங்கினப்பாளர்கள் உடனடியாக வந்து டார்கஸின் தலையில் பற்றி எரிந்த நெறுப்பினை அனைத்துச் சென்றார். இதனையடுத்து ஆரவராமாக சென்ற நிகழ்ச்சி அமைதியாக முடிவடைந்தது.
இதனையடுத்து தனது நிலையமையை குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக டார்காஸ்... தானும், தனது தலைமுடியும் நலமாக இருப்பதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
வருடந்தோறும் நடைபெறும் 'Miss Africa' போட்டியில் இந்த ஆண்டில் காங்கோ அழகி டார்காஸ் முதல் இடம் பிடித்து வெற்றிப் பெற்றுள்ளார். இவரைத்தொடர்ந்து நைஜிரா அழகி இரண்டாம் இடத்தினையும், மூன்றாம் இடத்தை ஜாம்பிய அழகியும் தட்டிச் சென்றுள்ளனர்.