மோடி அரசின் சட்டப்பிரிவு 370, 35A ரத்து நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கப்போவது என்ன?....
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் விதமாக பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்கள் குவிக்கப்பட்டதோடு, அந்த மாநிலத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. இதையடுத்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு பாஜக முயற்சித்து வருகிறது என அம்மாநில அரசியல் கட்சியினர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அதன்பின் ஓமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சியினர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இதை தொடர்ந்து, அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக அறிவித்தார். அதோடு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்படும் எனவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவையில்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும் எனவும் அறிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறினார். இந்த அறிவிப்பிற்கு பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மோடி அரசின் சட்டப்பிரிவு 370, 35A ரத்து நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கப்போவது என்ன?....
> இந்திய அரசியலமைப்பில் உள்ள அனைத்து சட்ட திட்டங்களும் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும்.
> ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளை இனி கூட்டலாம், குறைக்கலாம்.
> இனி கேரளா, கர்நாடகாவை போல பிற மாநில மக்களும் ஜம்மு-காஷ்மீரில் அசையா சொத்துக்கள் வாங்கலாம்.
> இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் எல்லா சட்டங்களும், மற்ற மாநிலங்களில் செல்லுபடியாவதைப் போல ஜம்மு காஷ்மீரிலும் செல்லும். பிரத்யேகமாக காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதலைப் பெறவேண்டிய அவசியமில்லை.
>நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு, அரசு உதவித் தொகைகள் வழங்குதல் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றை தீர்மானம் செய்யவும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு உரிமை வழங்குகிறது.
> காஷ்மீர் பெண்களும் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்தால் சொத்தில் உரிமை கோர வழிஏற்பட்டுள்ளது.
> ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் ஆளுநர் எடுக்காலாம்.
> ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு தகுதி வழங்குவது ரத்தாகும்.
> ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை எந்த ஒரு சட்டத்தையும் இயற்ற வழிவகை செய்யமுடியாது.