சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கேப்டனுமான தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ராஞ்சியில் இருக்கும் தன்னுடைய பண்ணையில் பல நூறு ஏக்கரில் பல்வேறு விவசாயங்களை செய்து வருகிறார். அது மட்டுமால்லாமல் தனக்கு பிடிக்கும் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்கிறார். அந்தவகையில் லேட்டஸ்டாக ஷாகா ஹாரி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார் எம்எஸ் தோனி.
ஷாகா ஹாரி நிறுவனம்
தாவரத்தின் புரத உணவுகளை தயாரித்து விற்பனை செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஷாகா ஹாரி வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஐடியா மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் முடிவை எடுத்திருக்கிறார் எம்எஸ் தோனி. இந்தியாவில் தாவரம் சார்ந்த உணவுகளின் மீதான விழிப்புணர்வு மற்றும் விற்பனையின் மார்க்கெட்டை அடிப்படையாக வைத்து ஷாகா ஹாரி, பெரிய அளவில் பிஸ்னஸை முன்னெடுத்துள்ளது. இப்போது தோனியும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதால், நிறுவனம் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | No Cost EMI-ல் பொருட்கள் வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!
இறைச்சி பிரியர் தோனி
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது குறித்து தோனி பேசும்போது, எனக்கு சிக்கன் மற்றும் இறைச்சி சாப்பிடுவதில் அதிகம் பிரியம். இருந்தாலும் சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வேன். இறைச்சிக்கு இணையான ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் ஷாகா ஹாரி நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. அவற்றின் தயாரிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
ஷாகா ஹாரி நிறுவனம் நன்றி
இந்தியாவின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரரான தோனி எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு நன்றி என அந்த நிறுவனம் கூறியுள்ளது. லிபரேட் புட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் நாகராஜன் பேசும்போது, தோனியின் முதலீடு மூலம் ஷாஹா ஹாரி நிறுவனம் மேலும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். இன்னும் சில மாதங்களில் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம். 30 ஆயிரம் வாடிக்கையாளர்களை அடைந்திருக்கும் நாங்கள் உலகளவிலும் ஷாகா ஹாரி பிராண்டை எடுத்துச் செல்ல இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | டிக்கெட் புக் பண்ண போறீங்களா? விதிகளை மாற்றியது ரயில்வே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ