நிகழ்ச்சி மேடையில் உளறிய ஓவியா! சமாளித்த நடிகர்!

தமிழ் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலாம் ஆனவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் பிரபலமானார். 

Updated: Mar 8, 2018, 11:51 AM IST
நிகழ்ச்சி மேடையில் உளறிய ஓவியா! சமாளித்த நடிகர்!

தமிழ் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலாம் ஆனவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் பிரபலமானார். 

இவர் அண்மையில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி விழாவில் பாடகர்களின் பெயரை மாற்றி சொல்லி சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். அந்த மேடையில் இருந்த இசையமைப்பாளரும், பாடகருமான தேவி ஸ்ரீ பிரசாத் என்று கூறுவதற்கு பதிலாக எஸ்.பி.பி சார் எனக்கு உங்களுடைய பாடல் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். உடனே சதீஷ் அது டிஎஸ்பி என்று தெரிவித்தார்.

தற்போது, ஓவியா ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘முனி 4’ (காஞ்சனா 3), ‘K2’, ’90ml’, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.