இளைஞர்களை அடிமையாக்கி வைத்துள்ள பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று 11 வயது சிறுவன் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளான்...
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தற்போது ஸ்மார்ட் போன் யுகத்தில் பயணித்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி (PUBG -playerUnknown's Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது, வரவேற்பு என்பதைக் கடந்து பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இது தொடர்பான செய்தியை நாம் தினமும் பார்க்கிறோம். ஓய்வில்லாமல் PUBG விளையாடிய மாணவர் மனநல பாதிப்பு. PUBG-ல் முழு நேரத்தையும் செலவிடும் மாணவர்கள் என தினமும் ஒரு செய்தி வருகிறது.
இதையடுத்து, பல்வேறு கல்வி நிலையங்களில் பப்ஜி விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மும்பை பாந்த்ராவில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் நிஜான், கடந்த 25 ஆம் தேதி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த விளையாட்டை சில நாட்கள் விளையாடினேன். அதை தொடர்ந்ததில் இருந்து எனக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றியதால் விட்டுவிட்டேன். அதில் வன்முறை, கொலை, கொடூரம், குழந்தைகளுக்கு பொருத்தமில்லாத தவறான மொழிகள் இருக்கிறது. அதனால் அதை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளான்.
இந்த கடிதத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ் டே உள்ளிட்டோருக்கும் அனுப்பியுள்ளான். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித் துள்ளான்.
நிஜானின் அம்மா மரியம் கூறும்போது, பள்ளிகளில் இந்த விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது அரசியல்வாதிகள், தேர்தல் கூட்டணி குறித்துதான் அதிகம் கவலைப்படுகின்றனர். நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் விஷயங்களிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.