சினிமா குடும்பத்தில் இருந்து அந்த நாயகிகளுள் ஒருவர், ரம்யா பாண்டியன். ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு. சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை தமிழக மக்கள் இடையே பிரபலமடைய செய்தது. அதற்கு முன்னர் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு நன்கு சமைக்கவும் தெரியும் என்பதை நிரூபித்தார். இவர், தன் உடலை நன்கு கவனித்துக்கொள்வார். இதற்காக தினசரி டய்ட் இருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற நடவடிக்கைகளை செய்து வருகிறார். இவர், தனது டயட் மற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸை ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவை என்னென்ன என்பதை இன்கே பார்ப்போம்.
டயட்:
ரம்யா பாண்டியன், தனது உடல் எடையை பாலன்ஸ் செய்ய டயட் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக தான் ஒரு டயட்டீஷியனை நியமித்துள்ளதாகவும் அவர் தனக்கு என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதை டயட சார்டாக தயாரித்து தன்னிடம் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். காய்கறி, பழம், உடலுக்கு நார்ச்சத்து கொடுக்கும் உணவுகள் என இவரது டயட்டில் பல உணவுகள் உள்ளன. இதை தவறாமல் கடைப்பிடிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பாராம் ரம்யா.
வர்க்-அவுட்:
2 வருடங்களுக்கு முன்பு இவரது வர்க் அவுட் வீடியோ ஒன்று வெளியானது. அதில், நம் உடல்தான் நமது சொத்து எனவும் அதை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் பேசியுள்ளார். இதனால்தான் தான் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல முடிவு எடுத்ததாகவும் கூறியிருந்தார். வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் உடற்பயிற்சி கூடத்தை தேர்வு செய்வது உடலுக்கு நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
உடல் எடையை குறைக்க தான் கார்டியோ வகை உடற்பயிற்சிகளையும் வெயிட் தூக்கும் உடற்பயிற்சிகளையும் செய்வதாக அவர் கூறியுள்ளார். ஆரம்பத்தில் தனக்கு உடற்பயிற்சி மிகவும் சிரமமாக இருந்ததாகவும் தற்போது தனது உடல் அதற்கு பழகிக்கொண்டதாகவும் ரம்யா தெரிவித்துள்ளார்.
வெயிட் லாஸ் ஆக...
தான், ஆண் தேவதை படத்தில் நடிப்பதற்காக உடல் எடை கூடியதாகவும் அதன் பிறகு எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியதாகவும் ரம்யா தெரிவித்துள்ளார். உடற் பயிற்சி செய்தால் கண்டிப்பாக மாற்றம் தெரியும் என்று கூறும் அவர், அதனுடன் சேர்ந்து டயட் இருந்தால் உடல் எடை கணிசமாக குறைய ஆரம்பிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தினசரி உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நம் உடலில் என்ன நிகழ்க்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வர்க் அவுட் செய்கையில் கண்டிப்பக தசைகளில் வலி ஏற்படும் என்று கூறும் ரம்யா, வலி ஏற்பட்டுவிட்டது என்பதற்காக உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக்கூடாது என கூறுகிறார். அப்போதுதான் ரிசல்டை காண முடியும் எனவும் கூறுகிறார். மேலும், உடற்பயிற்சிக்கு செல்ல வேண்டாம் என்று தோன்றும் சமயங்களில் நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
மனநலன் டிப்ஸ் சொல்லும் ரம்யா:
ரம்யா பாண்டியன், உடல் நலனுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளது போலவே மன நலனுக்கும் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார். அவை என்னென்ன தெரியுமா..?
>நம்மை சுற்றி பல காரணங்களுக்காக ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டுதான் இருகும். அதனால் நாம் எதை எதிர்கொள்ளும் முன்னரும் அமைதியை கடைபிடித்து நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
>நம்பிக்கைக்கு உரியோரை நம்முடன் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அது உங்களது நண்பர்களாக இருக்கலாம், அல்லது குடும்பத்தினராக இருக்கலாம். அவர்கள் யாராக இருப்பினும், நீங்கள் எதை கூறினாலும் உங்களை ஏளனமாக பார்க்காதவராக இருக்க வேண்டும்.
>நம்மை நாம் அதிகமாக காதலிக்க வேண்டும். உங்களுக்காக நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். பாசிடிவான எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ