ராசிபலன் டிசம்பர் 23, 2021: பண வரவு பெற உள்ள ராசிகள்

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.  சிம்ம ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 07:11 AM IST
ராசிபலன் டிசம்பர் 23, 2021: பண வரவு பெற உள்ள ராசிகள் title=

இந்த நாள் நல்ல நாள். மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நம்பிக்கை ஊட்டும் நாள் என்றால், சிம்ம ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். 

மேஷம்: இன்று உங்கள் குடும்பத்தில் பரஸ்பர நல்லிணக்கம் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவான நிலைப்பாட்டை வைத்திருங்கள். வியாபார விஷயங்களிலும் சாதகமான பலன்களே கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

ரிஷபம்: இன்று அனைவரிடமும் சற்று யோசித்து, கண்ணியமாகப் பேச வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு இன்று உகந்த நாள். அரசுப் பணிகளில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. பணப் பரிவர்த்தனைகளில் வெற்றி உண்டாகும்.

மிதுனம்: இந்த நாள் நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி பொங்கும். வியாபாரிகளுக்கு நாள் லாபகரமாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எனவே, செலவு செய்யும் மனநிலையில் இருப்பீர்கள். புதிய வேலையில் சில தடைகள் வரலாம். அவசரப்படுவதற்கு பதிலாக, சற்று சிந்தித்து செயலாற்றுங்கள்.  

கடகம்:  இன்றைய நாள் சுமாரான நாளாக இருக்கும். குடும்பத்தில் யாரேனும் ஒருவருடன் இணைந்து வியாபாரம் செய்ய நினைத்தால் அது நன்றாக இருக்கும். வேலை இடத்தில் நிலைமைகள் மேம்படும். மோதல்போக்கு பயனளிக்காது. குடும்ப உறுப்பினர்களின் உற்சாகத்தை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள்.
 
சிம்மம்: அனைவரின் கருத்துக்களையும் கேட்க முயற்சிப்பீர்கள். புதிய சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள், எளிதாக இருக்கும். நிலம், சொத்து சம்பந்தமான வேலைகள் இருக்கும். பெண்களுக்கு பணியிடத்தில் சாதகமான நாள்.

கன்னி: இன்று நல்ல செய்திகள் கிடைக்கும். கடின உழைப்பால், கடினமான காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். திட்டங்களை குறித்த நேரத்தில் செயல்படுத்த முடியும் இன்று, உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.

ALSO READ | கேது பெயர்ச்சி 2022: ‘இந்த’ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

துலாம்: வியாழன் அன்று புதிய இலக்குகளை நிர்ணயித்து முயற்சிகளைத் தொடங்குங்கள். வியாபார விஷயங்களை புத்திசாலித்தனமாக கையாளலாம். பண வரத்து இருக்கும். எந்தவொரு வேலையைச் செய்தாலும், மன அமைதியுடன் மேற்கொள்ளுங்கள். இல்லற வாழ்வு இனிமையானதாக இருக்கும்.  

விருச்சிகம்: தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் ஒவ்வொரு இலக்கையும் அடைவீர்கள். தொழிலை விரிவுபடுத்த வங்கியில் கடன் வாங்கலாம். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். புதிய உத்தியோகத்தில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  

தனுசு: இன்று ஆரோக்கியம் மேம்படும். உங்களுடைய புரிதல் மற்றும் கண்ணியமான அணுகுமுறை அனைவரையும் கவரும். வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நல்ல செய்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் கருத்தை வெளிப்படையாக தெரிவியுங்கள்.

மகரம்: இன்று பெண்களுக்கு உகந்த நாள். உங்கள் பிரார்த்தனைகளுக்கான பலன் கிடைக்கும். உற்சாகமாக உணர்வீர்கள். தடைபட்ட வேலைகள் நிறைவேறும் வாய்ப்புகள் அதிகம். குடும்பச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களின் மனம் படிப்பில் ஈடுபடும்.

கும்பம்: இன்று எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவியும் நாள். பல நாட்களாக நிலுவையில் இருக்கும் வேலைகள் இன்ரு முடியும். பண விஷயத்தில் சிறப்பாக திட்டமிடலாம்.  இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டுச் செலவுகள் குறையலாம்.

மீனம்: இன்று அனைவரிடமும் கவனமாகப் பேச வேண்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான நாள். பணப் பரிவர்த்தனைகளில் வெற்றி உண்டாகும். வேலையை சிறப்பாக செய்து உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ALSO READ | பிறந்த கிழமை உங்கள் குணாதிசயத்தை எடுத்து சொல்லும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News