மொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு RBI அனுமதி...!

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மொபைல் வாலட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2018, 03:33 PM IST
மொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு RBI அனுமதி...!  title=

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மொபைல் வாலட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி...! 

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல விதமான மொபைல் வாலட்டுகளிடையே பணபரிவர்த்தனை செய்து கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போதுள்ளதை விட, அடுத்த 5 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்து ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஒரு மொபைல் வாலட்டில் இருந்து மற்றொரு நிறுவன வாலட்டிற்கு பண பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. paytm, மொபிக்விக், போன்பே போன்ற நிறுவனங்கள் விருப்பப்பட்டால் மற்ற நிறுவன வாலட்டுகளுக்கு பண பரிவர்த்தனை செய்து கொள்ள பயனாளர்களை அனுமதிக்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விஜயா வங்கி, தேனா வங்கி ,பேங்க் ஆஃப் பரோடா மூன்று வங்கிகளை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூன்று வங்கிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் 3_ஆவது பெரிய வங்கியாக இது இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள், வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விவகாரத்தில் சீரமைப்பு செய்ய மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. 

 

Trending News