புதுடெல்லி: வங்கிகள் (BANK) மற்றும் என்.பி.எஃப்.சிகளின் (NBFC) செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நடவடிக்கை மூலம், இப்போது வங்கிகளில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு முன்பை விட சிறப்பாக இருக்கும். 1 நவம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வரும் ரிசர்வ் வங்கியின் புதிய விதியின் கீழ், வங்கிகளை மேற்பார்வை செய்ய ஒரு துறை இருக்கும். இந்தத் துறை அவ்வப்போது அனைத்து வங்கிகளையும், என்.பி.எஃப்.சியையும் மேற்பார்வையிடும்.
வங்கி தவிர, என்.பி.எஃப்.சி, கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் புதிய விதியின் கீழ் கண்காணிக்கப்படும். தற்போதுள்ள அமைப்பின் கீழ், வங்கி, என்.பி.எஃப்.சி மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் தங்கள் சொந்த மேற்பார்வை துறைகளைக் கொண்டுள்ளன. ஆனால் இப்போது புதிய விதியின் கீழ் வங்கி, என்.பி.எஃப்.சி மற்றும் கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குமுறை துறை கண்காணிக்கும். ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைக்கு ஒரு தனித்துறை இருப்பதன் மூலம் வங்கிகளின் செயல்பாடு மேம்படும்.
இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ஒவ்வொரு வங்கியும் தங்கள் அனுபவங்களை பகிர்வது மூலம் வங்கிகள், என்.பி.எஃப்.சி மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.
என்.பி.எஃப்.சி மற்றும் பல வங்கிகளின் செயல்பாட்டில் முறைகேடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.