ஒரு கிராம் உப்பை குறைத்தால் இதய பாதிப்பு குறையும் - ஆய்வில் தகவல்

நாள் ஒன்றுக்கு ஒரு கிராம் உப்பை குறைத்துக்கொண்டால் வருங்காலங்களில் இதய நோய் தொடர்பான ஆபத்து குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 9, 2022, 05:35 PM IST
  • தினமும் ஒரு கிராம் உப்பை குறைக்க வேண்டும்
  • அப்படி குறைத்தால் இதயநோய்களை குறைக்கலாம்
  • அதாவது 2030ல் 90 லட்சம் இதய நோய்களை குறைக்க முடியும்
ஒரு கிராம் உப்பை குறைத்தால் இதய பாதிப்பு குறையும் - ஆய்வில் தகவல் title=

உப்பு சமையலறையில் தவறாமல் இடம்பெற்றிருப்பது. அனைத்து வகையான உணவு வகைகளிலும் உப்பின் தேவை இருக்கிறது. ஆனால் அது அளவுக்கு மீறி போனால் உடலுக்கு கேடு விளைவிக்கும் தன்மையும் உடையதாகும். குறிப்பாக அதிகளவு உப்பினை சேர்த்துக்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்துவிடும். 

இந்நிலையில் ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்  ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன்படி,, நரம்புகளை தூண்டுவதற்கும், தசைகளை சுருக்குவதற்கும், தளர் வடைய செய்வதற்கும், தண்ணீர் மற்றும் தாதுக்களின் சம நிலையை பராமரிப்பதற்கும் மனித உடலுக்கு சிறிதளவு சோடியம் (உப்பு) தேவைப்படுகிறது.  ஆனால் அது அளவுக்கு மீறும்போது ஆபத்தை உருவாக்குகிறது.

Salt

குறிப்பாக சீனாவில் நிகழும் உயிரிழப்புகளில் 40 விழுக்காடு இதய நோய்களே காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, சீனர்கள் தினமும் 11 கிராம் உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 

மேலும் படிக்க | Grey Hair: நரை முடியை கருமையாக்கும் காபி டிகாக்‌ஷன்; பயன்படுத்துவது எப்படி!

இந்தச் சூழலில், ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பை குறைப்பதன் மூலம் தமனிகளின் சீரற்ற செயல்பாடுகளால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை 4 சதவீதம் குறைக்க முடியும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6 சதவீதம் குறைக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெளிவுப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | High Cholesterol: இந்த இடங்களில் வலி இருக்கா? ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம், ஜாக்கிரதை!!

அதுமட்டுமின்றி அவ்வாறு ஒரு நாளுக்கு ஒரு கிராம் உப்பை குறைத்துக்கொள்வதன் மூலம் 2030ஆம் ஆண்டில் 90 லட்சம் இதய நோய் பாதிப்புகளை குறைக்கலாம். 40 லட்சம் உயிர்களை காப்பாற்றலாம் எனவும் தெரிய வந்திருக்கிறது.

மேலும் படிக்க | Health Alert: ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்திடம் இருந்து விலகியே இருங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News