ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ய போறிங்களா? இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க!

பதிவு திருமணம் செய்பவர்களுக்கு சாட்சியாக குறைந்தபட்சம் 4 நபர்களாவது இருக்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : May 30, 2022, 01:17 PM IST
  • குறைந்தது 4 நபராவது வந்து சாட்சி கையெழுத்து போடவேண்டும்.
  • இ-சர்வீஸ் சென்டர் வழியாகவும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • ஹிந்து கோவில்களில் திருமணம் செய்திருந்தால் ரூ.100 செலுத்த வேண்டும்.
ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ய போறிங்களா? இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க! title=

இந்தியாவில் பதிவு செய்யப்படும் திருமணங்களுக்கு தேவையான ஆவணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் சற்று வேறுபடுகிறது.  பதிவு திருமணம் செய்யப்போகும் மணமக்கள் இருவரும் அருகிலுள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் குறிப்பிட்ட விண்ணப்ப படிவங்களை நிரப்பி அதற்கான கட்டணத்தையும் செலுத்திவிட வேண்டும்.  மணமகன் மற்றும் மணமகள் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் முன்னரே வருகை தந்திருக்க வேண்டும், பின்னர் பதிவாளர் முன்னைலையில் இருவரும் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்து கையொப்பமிட வேண்டும்.

மேலும் படிக்க | டிரைவிங் லைசென்ஸ் விதிகள் மாற்றம்; மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள்

பதிவு திருமணம் செய்யும் மணமக்களின் திருமணத்திற்கு சாட்சியாக அவர்களுடன் குறைந்தது 4 நபராவது வந்து சாட்சி கையெழுத்து போடவேண்டும்.  திருமணம் செய்யும் நபர்கள் அவர்களின் உண்மையான திருமண பத்திரிக்கையை கொடுக்க வேண்டும், இருவரும் மாலையணிந்து திருமண உடையில் இருக்கும் போட்டோ ஒன்றையாவது சாட்சிக்கு கொடுக்க வேண்டும்.  இ-சர்வீஸ் சென்டர் வழியாகவும் இதற்கு விண்ணப்பிக்கலாம், அதற்கு இ-சர்விஸ் சென்டர் அல்லது சிஎஸ்சி சென்டர்களை அணுக வேண்டும்.  முனிசிபாலிட்டி அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சர்விஸ் சென்டர்களை தேர்ந்தெடுத்து அங்கும் திருமணத்தை பதிவு செய்யலாம்.

பதிவு திருமணம் செய்வதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களாவன:

*திருமண அழைப்பிதழ்.
*கோவில் திருமண ரசீதுகள்.
*திருமண நிச்சயதார்த்தத்திற்கான வேறு ஏதேனும் ஆதாரம்.
*மணமகன் அல்லது மணமகள் இருவரின் அடையாள அட்டை.
*மணமகன் அல்லது மணமகள் இருவரின் ரேஷன் கார்டு.
*மணமகன் அல்லது மணமகள் இருவரின் ஓட்டுநர் உரிமம்.
*மணமகன் அல்லது மணமகள் இருவரின் பாஸ்போர்ட் அல்லது விசா.
*மணமகன் அல்லது மணமகளின் பிறப்புச் சான்றிதழ்.
*மணமகன் அல்லது மணமகளின் பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ்.
*மணமகன் மற்றும் மணமகளின் பாஸ்போர்ட் அல்லது விசா.
*மணமகன் மற்றும் மணமகளின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் மொத்தம் நான்கு.
*சாட்சி கையெழுத்து போடும் இருவரின் ஆதரங்கள் ஏதேனும்.
*மணமகன்21 வயது நிரம்பியவராகவும் மற்றும் மணமகள் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.

பதிவு திருமணத்திற்கான கட்டணங்கள்:

ஹிந்து கோவில்களில் திருமணம் செய்திருந்தால் ரூ.100 செலுத்த வேண்டும், அந்த நகலை பெற ரூ,10 செலுத்த வேண்டும்.  பதிவு திருமணம் செய்யும் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் நடந்தால் ரூ,200 செலுத்த வேண்டும்.  தேவையான அனைத்தையும் செய்ததும் 30 நாட்களில் பதிவு திருமணத்திற்கான சான்றிதழ் தயாராகிவிடும், அதனை பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்; புதிய புக்கிங் முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News