பொதுவாக சரியான உணவுப் பழக்கம் இல்லாதது நமது சருமத்தை அதிகம் பாதிக்கிறது, இதன் காரணமாக பெரும்பாலோனோர் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெறுகின்றனர். எனவே நம் உடலை நன்கு கவனித்து, சரியான உணவை சாப்பிட்டு வயதான காலத்திலும் நன்கு சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருப்பது அவசியம். ஆரோக்கியமாக இருக்க சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம். முதுமை என்பது ஒரு இயற்கையான செயல்முறை, அதைத் தடுக்க முடியாது என்றாலும், சில செயல்கள் மூலம் நம்மால் முதுமையிலும் இளமையாகவும், பிட்டாகவும் இருக்க முடியும். வேலை, வாழ்க்கை முறை மற்றும் பணிச்சுமை காரணமாக, நாம் அடிக்கடி நமது அன்றாட உணவு பழக்கங்களை மாற்றுகிறோம் மற்றும் சரியான நேரத்தில் சாப்பிடுவது இல்லை. இது போன்ற விஷயங்கள் நமது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. சரியான உணவுப் பழக்கம் இல்லாதது நமது சருமத்திற்கு நேரடி பாதிப்பை தருகிறது. இதன் காரணமாக நாம் வயதாகும் முன்பே வயதான தோற்றத்தை பெரும் நிலை ஏற்படுகிறது.
மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!
உணவு: வயதான காலத்தில் இளமையாகவும், ஃபிட்டாகவும் இருக்க சமச்சீரான உணவு முறை அவசியம், தினசரி சரிவிகித உணவை எடுக்க வேண்டும் என்று பல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல வாழ்க்கை முறைக்கு, நீங்கள் சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது முக்கியம், இதற்காக தினசரி உணவை 3 வேளை சாப்பிடாமல், 5 வேளைகளாக பிரித்து அதில் பல வகையான காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்ப்பது முக்கியம்.
வழக்கமான உடற்பயிற்சி: எப்போதும் இளமையாக இருக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். இதனால் உடலில் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபடுவதுடன் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். மேலும் உடற்பயிற்சி செய்வது தசை வலிமை, உடல் நெகிழ்வு மற்றும் இதய நோய்களை தவிர்க்க உதவுகிறது. இதற்கு உட்கடாசனம், கோனாசனம், புஜங்காசனம் போன்ற யோகாசனங்களை செய்ய வேண்டும்.
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்: இளம் தோல் மற்றும் உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உடல் நீரேற்றமாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
நல்ல தூக்கம் முக்கியம்: உடலை சீரமைக்க நல்ல இரவு தூக்கம் அவசியம், ஏனென்றால் தூக்கமின்மை உங்கள் இயல்பில் மாற்றத்தை ஏற்படுத்தி எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் இது நீங்கள் இளம் வயதிலேயே வயதானது போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் தினசரி 7 முதல் 8 மணி நேரம் போதுமான தூக்கத்தைப் பெறுவது முக்கியம். போதுமான தூக்கம் புத்துணர்ச்சியை பராமரிக்கிறது மற்றும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
பதற்றம்: நீண்ட நேரம் பதற்றமாக இருப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் வைத்திருப்பது முக்கியம். பதற்றம் இல்லாமல் இருக்க, தினமும் யோகா மற்றும் தியானம் செய்யலாம். யோகா மற்றும் தியானம் உங்களுக்கு மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும், மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் உங்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ