பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இனி கேக் வெட்ட கட்டுப்பாடு...

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் முகங்களில் கேப் பூசி விளையாட சூரத் காவல்துறை தடை வித்தித்துள்ளது!

Last Updated : May 19, 2019, 01:54 PM IST
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இனி கேக் வெட்ட கட்டுப்பாடு... title=

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் முகங்களில் கேப் பூசி விளையாட சூரத் காவல்துறை தடை வித்தித்துள்ளது!

குஜராத் மாநிலம் சூரத்தில் சமீபத்தில் குழந்தைகளைக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டு என PUBG தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் பூசி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துணை ஆய்வாளர் PL சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில்., பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் வைத்து ஒருவருவர் மற்றொருவர் மீது கேக் பூசி விளையாடுவது பிரிவு 144-ன் கீழ் குற்றமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை ஆணை மீறி இவ்வாறான கொண்டாட்டத்தில் ஈடுப்படும் மக்கள் மீது இந்தியன் பீனல் கோர்ட் சட்ட பிரிவு 188-ன் தண்டிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்., இவ்வாறான பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது தனிநபர் பலர் காயம் அடைவதாகவும், விபத்துக்கள் நிகழ்வதாகவும் எழுந்த புகாரின் பேரில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் காரணம் கேக் பூசி விளையாடுதல் என்பதை விட., இளைஞர்களின் இத்தகைய செயலால் ஏற்படும் பாதிப்பே ஆகும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு என்னும் அடிப்படையிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News