நிலையான வைப்புத்தொகை விகிதங்கள்: பெரும்பாலான மக்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வட்டி பெறக்கூடிய குறுகிய கால FD களைத் தேடுகின்றனர். இங்கே நாங்கள் உங்களுக்கு மூன்று வருட முதலீட்டு விருப்பத்தைப் பற்றி தகவல் வழங்கப் போகிறோம், அதில் நீங்கள் அதிக லாபம் பெறலாம்.
BankBazaar.com இன் தரவுகளின்படி, மூன்று ஆண்டு FDக்கான சராசரி வட்டி விகிதம் 7.6 சதவீதம். 3 வருட FDக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கிகளின் பட்டியல் இதோ.
நிலையான வைப்புத்தொகை (FD) முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்:
சூர்யோதாய் சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank):
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று வருட FDக்கு (Fixed Deposit) 8.6 சதவீத வட்டி அளிக்கிறது. சிறு நிதி வங்கிகளில் 3 வருட FDக்கான சிறந்த விகிதம் இதுவாகும். இங்கு ரூ.1 லட்சம் முதலீடு மூன்று ஆண்டுகளில் ரூ.1.29 லட்சமாக அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. வட்டியை அள்ளித் தரும் வங்கிகள் இவையே
AU சிறு நிதி வங்கி (AU Small Finance Bank):
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று வருட FDகளுக்கு 8 சதவீத வட்டியை வழங்குகின்றன. இங்கு ரூ.1 லட்சம் முதலீடு மூன்று ஆண்டுகளில் ரூ.1.27 லட்சமாக உயரும்.
டியூட்சே வங்கி (Deutsche Bank):
வெளிநாட்டு வங்கிகளில், Deutsche Bank மூன்று வருட FDக்கு 7.75 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வங்கிகளின் எஃப்.டி.யில் முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.26 லட்சமாக உயரும்.
DCB வங்கி (DCB Bank):
டிசிபி வங்கி மூன்று வருட நிலையான வைப்புத்தொகைக்கு (FD Rates) 7.60 சதவீத வட்டி அளிக்கிறது. இது தனியார் துறை வங்கிகளில் அதிக வட்டியை வழங்குகிறது. இங்கு ரூ.1 லட்சம் முதலீடு மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சமாக அதிகரிக்கும்.
பந்தன் வங்கி (Bandhan Bank):
பந்தன் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை மூன்று வருட FDகளுக்கு 7.25 சதவீத வட்டியை வழங்குகின்றன. ரூ.1 லட்சம் முதலீடு மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக வளரும்.
உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி (Ujjivan Small Finance Bank):
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று வருட FDக்கு 7.20 சதவீத வட்டி அளிக்கிறது. ரூ.1 லட்சம் முதலீடு மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக வளரும்.
உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank):
700 நாட்களுக்கான FDக்கு வங்கி பொது மக்களுக்கு 8.00 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank):
இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான எஃப்டிகளுக்கு வங்கி பொது மக்களுக்கு 8.10 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 8.80 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ