UPSC Recruitment 2020: நீங்கள் அரசு வேலைக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) 204 பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்ய தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Grade-3 உதவி பேராசிரியர் (Assistant Professor), லைவ் ஸ்டாக் அலுவலர் மற்றும் உதவி பொறியாளர் ஆகிய பதவிகளுக்கு இந்த ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் விண்ணப்பத்தை (Online Application) அனுப்பும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 2020 அக்டோபர் 1 ஆகும். UPSC-ன் இந்த ஆட்சேர்ப்பில் விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் upc.gov.in க்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு, ஆட்சேர்ப்புக்காக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தக் காணலாம்.
இந்த பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது
கால்நடை அலுவலருக்கான மூன்று காலி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது.
தகுதி: - கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். விலங்குகளின் ஆரோக்கியம் அல்லது அது தொடர்புடைய துறையில் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Specialist Grade 3- உதவி பேராசிரியர் (மயக்கவியல்) - 63 காலி இடங்கள்
Specialist Grade 3- உதவி பேராசிரியர் (தொற்றுநோய்) - 1 காலி இடம்
Specialist Grade 3- உதவி பேராசிரியர் (அறுவை சிகிச்சை) - 54 காலி இடங்கள்
Specialist Grade 3- உதவி பேராசிரியர் (நுண்ணுயிரியல் அல்லது பாக்டீரியாலஜி) - 15 காலி இடங்கள்
Specialist Grade 3- உதவி பேராசிரியர் (நெப்ராலஜி) - 12 காலி இடங்கள்
Specialist Grade 3- உதவி பேராசிரியர் (நோயியல்) - 17 காலி இடங்கள்
Specialist Grade 3- உதவி பேராசிரியர் (குழந்தை நெப்ராலஜி) - 3 காலி இடங்கள்
Specialist Grade 3- உதவி பேராசிரியர் (மருந்தியல்)- 11 காலி இடங்கள்
விண்ணப்பிப்பதற்கான தகுதி
உதவி பேராசிரியருக்கான அனைத்து பதவிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து MBBS பட்டம் மற்றும் மூன்று ஆண்டு கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆட்சேர்ப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு, இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பை இங்கே காணலாம்:
https://upsc.gov.in/sites/default/files/Advt-No-10_2020-Engl.pdf
உதவி இயக்குநர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள்- 25 காலி இடங்கள்
உதவி பொறியாளர் - 1 காலி இடம்
தகுதி – டிரில்லிங் அல்லது மைனிங் அல்லது மெகானிகல் அல்லது சிவில் பொறியியல் பட்டம். மூன்று வருட பணி அனுபவம் இருப்பதும் முக்கியம்.
ALSO READ: அமெரிக்காவில் பணிபுரியும் மக்கள் மீது நெருக்கடி, பணிநீக்கம் அறிவித்த பல நிறுவனங்கள்