தீபாவளி இலவச எல்பிஜி சிலிண்டர் கிடைக்காது, கேஒய்சி அப்டேட் உடனே செய்யுங்கள்

Free LPG cylinder Diwali : இந்த ஆண்டு தீபாவளிக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருக்கும் நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சி அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 9, 2024, 06:35 AM IST
  • தீபாவளி இலவச சிலிண்டர் அப்டேட்
  • கேஒய்சி அப்டேட் செய்ய அறிவுறுத்தல்
  • அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி தேதி
தீபாவளி இலவச எல்பிஜி சிலிண்டர் கிடைக்காது, கேஒய்சி அப்டேட் உடனே செய்யுங்கள் title=

Free LPG cylinder Diwali Latest Update : உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்யும் பாஜக இந்த ஆண்டு தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர் அறிவித்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளியையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், தீபாவளிக்கு முன் அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இலவச சிலிண்டர் விநியோகம் செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

இலவச சிலிண்டர் பெறுவது எப்படி?

அதாவது, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்ற பயனாளிகள் உடனடியாக தங்களின் இ-கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்யாதவர்களுக்கு இலவச சிலிண்டர் கிடைக்காது. அதனால், சிலிண்டர் நிறுவனங்கள் சார்பில் ஏஜென்சி நடத்துபவர்களும் பயனாளிகளுக்கு வீடு வீடாக இ-கேஒய்சி நடத்தி வருகின்றனர். அதில், முகவரி மற்றும் அலைபேசி எண்களை மாற்றிய பயனாளிகளை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | தீபாவளி போனஸ்.. பெண்களுக்கு இலவச சிலிண்டர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்

மத்திய அரசின் சிலிண்டர் மானிய தொகை

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் எடுக்கும் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மத்திய அரசு ரூ.350, மாநில அரசு ரூ.615 அனுப்புகிறது. வாரணாசி பகுதியில் மட்டும் சுமார் 2.36 லட்சம் உஜ்வாலா பயனாளிகள் உள்ளனர். அதில் இதுவரை 35 ஆயிரம் பயனாளிகள் இ-கேஒய்சி அப்டேட் செய்யவில்லை. இதன் காரணமாக, பயனாளியின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை NPCI இணையதளத்தில் பதிவு செய்ய முடியாததால், மானியம் தொகை செலுத்துவதில் பெரும் சுணக்கம் இருக்கிறது.

மானியத் தொகை NPCI மூலம் மட்டுமே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து வாரணாசி எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் குமார் அகர்வால் கூறியதாவது: முகவரி மற்றும் மொபைல் எண்களை மாற்றிய பயனாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. இந்த பயனாளிகள் அக்டோபர் 31 ஆம் தேதி e-KYC ஐப் பெற வேண்டும். அவர்களுக்கு மட்டுமே தீபாவளி இலவச கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். 

இலவச சிலிண்டர் விண்ணப்பம் தேவையான ஆவணங்கள்

18 வயது நிரம்பிய இந்திய குடிமகனாக இருந்தால் நீங்கள் மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பை பெற முடியும். ஆன்லைன், ஆப்லைன் என இரண்டு வழிகளிலும் இதற்கான படிவத்தைப் பெற்று, அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்பி அருகில் உள்ள சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் குடியிருக்கும் முகவரி, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, வயது, தொலைபேசி விவரம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். இந்தியாவின் எந்த பகுதியில் வாடகை வீட்டில் இருப்பவர்களும் வாடகை ஒப்பந்தம் கொடுத்து, இந்த திட்டத்தில் கீழ் பயனாளியாக சேர்ந்து கொள்ள முடியும்.  

சிலிண்டர் பெற தேவையான ஆவணங்கள்

வங்கி கணக்கு எண் புதக்கம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மொபைல் எண், வாடகை வீட்டில் குடியிருந்தால் வாடகை ஒப்பந்தம், மின் இணைப்பு எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் சிலிண்டர் எடுப்பவர்களுக்கு அதிக மானிய தொகை கிடைக்கும். அதிகபட்சம் 350 ரூபாய் வரை மாதந்தோறும் மத்திய அரசு பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும். மற்றவர்களுக்கு 40 ரூபாய் வரை மட்டுமே மானியம் கிடைக்கும். 

மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டர் மானியம் வராதவர்கள் உடனே இதை செய்யுங்கள்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

Trending News