Vastu Tips: செல்வத்தையும் ஆற்றலையும் அதிகரிக்க எளிய பரிகாரம்

Fish Vastu Tips: உங்கள் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் ரகசியம் வீட்டின் வாஸ்துவில் மறைந்துள்ளது. முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை படிக்கவும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 3, 2022, 01:43 PM IST
  • வீட்டில் மீன் வைப்பதன் முக்கியத்துவம் என்ன
  • வீட்டில் மீன் வைப்பது மிகவும் மங்களகரமானது
  • மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால் என்ன
Vastu Tips: செல்வத்தையும் ஆற்றலையும் அதிகரிக்க எளிய பரிகாரம் title=

ஒவ்வொருவருக்கும் தங்கள் வீட்டை அலங்கரிப்பது ஒரு பொழுதுபோக்காகும். அதனால்தான் சுவரில் விதவிதமான சிற்பங்களும் ஓவியங்களும் போடப்படுகின்றன. அதன்படி உங்கள் வீட்டில் செல்வம் மற்றும் ஆற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று ம் காண உள்ளோம்.

வீட்டில் மீன் வைப்பதன் முக்கியத்துவம் என்ன
பல கலாச்சாரங்களில் மீன் தொட்டி அதிர்ஷ்டம் கொட்டும் ஒன்றாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதை வீட்டில் சரியான இடத்தில் வைப்பதன் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம். அதன்படி உங்கள் வீட்டில் மீன் தொட்டியை வைத்திருந்தால், ஒரு சிலவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து, வீட்டில் வறுமையை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | வளங்களை அள்ளித்தரும் ஏகாதசி விரதம்; கடைபிடிக்கும் முறை

பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மீன் வைப்பது மிகவும் மங்களகரமானது. உங்கள் வீட்டில் மீன்வளத்தை வடக்கு மற்றும் கிழக்கு திசையில் வைத்தால், அது உங்கள் வீட்டின் எதிர்மறையை நீக்கும் மற்றும் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்வார். சிலர் தங்கம் அல்லது வெள்ளி மீன்களை தங்கள் வீட்டில் செய்து வடக்கு அல்லது கிழக்கு மூலையில் நிறுவுவார்கள். இதனால் வீட்டின் அழகும், செல்வமும், ஆற்றலும் பெருகும்.

அதேபோல் மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும். ஒருவேளை அந்த கருப்பு மீன் இறந்துவிட்டால், அது வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம். மறுபுறம் மீன் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வைத்தால், அது அளவுக்கு அதிகமாக கண்டதை பற்றி சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.

வீட்டில் மீன் எங்கு வைக்கக்கூடாது
வீட்டில் எப்போதும் மீன் தொட்டியை சமையலறையில் அல்லது படுக்கை அறையில் வைத்திருக்கக்கூடாது. இதனால் வீட்டில் பண இழப்பு தான் ஏற்படும். ஃபெங் சூயி படி, மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்கள் இருக்க வேண்டும். அதிகப்பட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவேளை மீன் இறந்துவிட்டால், அதை நீக்கிவிட்டு, அதே நிறத்தில் மற்றொரு மீனை தவறாமல் வாங்கிப் போடுங்கள்.

வாஸ்து படி சிறந்த மீன்கள் எவை
அரோவானா அல்லது டிராகன் மீன்
தங்கமீன்
பிளாக்மூர்
பட்டாம்பூச்சி கோய்
மலர் கொம்பு மீன்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும், பல அதிசயங்கள் நடக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News