இனி Google மூலம் நேரடியாக விமான டிக்கெட்டுகளை புக் செய்யலாம்: Vistara-வின் புதிய அம்சம்

கூகிளில் விமானங்களைத் தேடும்போது, ​​வாடிக்கையாளர்கள் வேறு எந்த வலைத்தளத்திற்கும் அனுப்பப்படாமல் விஸ்தாரா விமானங்களை நேரடியாக முன்பதிவு செய்ய முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2020, 11:03 AM IST
  • இனி விஸ்தாரா விமானங்களுக்கான டிக்கெட்டுகளை கூகிளிலிருந்து நேரடியாக புக் செய்யலாம்.
  • இதற்கான புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது நிறுவனம்.
  • இது பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தும்.
இனி Google மூலம் நேரடியாக விமான டிக்கெட்டுகளை புக் செய்யலாம்: Vistara-வின் புதிய அம்சம் title=

சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனமான விஸ்தாரா, பயணிகளுக்கு தங்கள் வீட்டின் வசதியான சூழலிலிருந்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை அளித்துள்ளது. தனது ‘Book on Google’ அம்சத்தின் மூலம், கூகிளில் பயணிகள் நேரடியாக டிக்கெட்டுகளை தெடி வாங்க நிறுவனம் வசதி அளிக்கிறது.  

அமேடியஸுடனான தொழில்நுட்ப கூட்டாண்மை மூலம் சாத்தியமான புதிய விநியோக திறனை (NDC) விஸ்தாரா செயல்படுத்திய பின்னர் நிறுவன செயல்முறைகளில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டின் கீழ், பயணிகள் Google-ல் சர்வதேச விமான (International Flight) நிறுவனமான விஸ்தாரா விமானங்களைத் தேடும்போது, வேறு எந்த வலைத்தளத்திற்கும் திருப்பி விடப்படாமல், விஸ்தாரா விமானங்களை தடையின்றி முன்பதிவு செய்ய முடியும்.

"இந்த புதிய 'புன் ஆன் கூகிள்’ அம்சம் பயணிகளின் அனாவசிய தொந்தரவுகளை நீக்கி அவர்களுக்கு மேன்மையான, அதிக அளவிலான வசதிகளைக் கொடுக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று விஸ்தாராவின் தலைமை வணிக அதிகாரி வினோத் கண்ணன் தெரிவித்தார்.

கூகிளில் (Google) விமானங்களைத் தேடும்போது, ​​வாடிக்கையாளர்கள் வேறு எந்த வலைத்தளத்திற்கும் அனுப்பப்படாமல் விஸ்தாரா விமானங்களை முன்பதிவு செய்ய முடியும்.

"வாடிக்கையாளர்கள் படிப்படியாக விருப்ப மேம்படுத்தல்கள், கூடுதல் பேகேஜ் அலொவன்சை முன்னரே வாங்கும் வசதி, இருக்கை தேர்வு மற்றும் பல்வேறு வசதிகளை ஒரே கூகிள் இடைமுகத்தில் கண்டு, தேவையான வசதிகளை வாங்க முடியும்” என்று டாடா குழுமம் (Tata Group) மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விஸ்தாரா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், விஸ்தாரா வாடிக்கையாளர்கள் தங்கள் கூகிள் கணக்கில் சேமிக்கப்பட்ட கட்டண ஆப்ஷன்களைப் பயன்படுத்தலாம் என்றும், முன்பதிவு செய்யும் போது புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் விஸ்தாரா கூறியுள்ளது.

ALSO READ: Air India டிக்கெட்டுகளில் 50% தள்ளுபடி: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

முன்னதாக, விமான பயணிகளுக்கான மற்றொரு நல்ல செய்தியாக, ஏர் இந்தியா விமான கட்டணங்களுக்கான விஷயத்தில் முதியவர்களுக்கு (Senior Citizens) ஒரு பெரிய நிவாரணத்தை அளித்தது. ஏர் இந்தியா இப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கிறது.

ஏர் இந்தியாவின் (Air India) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஏர் இந்தியா இப்போது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனது டிக்கெட்டுகளை பாதி விலையில் விற்பனை செய்யும். இது குறித்த விரிவான தகவல்கள் ஏர் இந்தியா வலைத்தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

ALSO READ: Indian Railways டிக்கெட் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே

நாட்டின் ஒரே அரசு நிறுவனமான ஏர் இந்தியா கடும் கடன் சுமையால் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. ஏர் இந்தியா தற்போது 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனைக் கொண்டுள்ளது, அதற்காக விற்கப்படும் நிலையிலும் உள்ளது.

ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குவதால், அதை மத்திய அரசு (Central Government) தனியார் துறைக்கு ஒப்படைக்க முயற்சிக்கிறது. அண்மையில் ஏர் இந்தியாவை வாங்க ஏலங்களுக்கான அழைப்புகளும் விடுக்கப்பட்டன.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News