இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு வாங்குவது பலருக்கும் பெரிய கனவாக இருந்து வருகிறது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ஒருவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் 90% அன்றாட செலவுகளுக்கு எடுத்து வைக்க வேண்டிய நிலையில் பணவீக்கம் உள்ளது. இந்நிலையில், நீங்கள் புதிதாக வீடு அல்லது சொத்துக்கள் வாங்க திட்டம் வைத்து இருந்தால், அதனை உங்கள் மனைவி பெயரில் வீடு வாங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். பெண்களுக்காக, பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க | மருதாணியை தலையில் தேய்ப்பதால் இந்த பக்க விளைவுகள் வரலாம்! ஜாக்கிரதை!
அதற்காக பல இடங்களில் அவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல், பெண்களுக்கான தனி வரி வரம்பையும் அரசு வைத்துள்ளது. பெண்களுக்கு சொத்து வாங்குவதில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் மூலம் வட்டி மானியங்களை அரசு வழங்குகிறது. உங்கள் பணத்தை சேமிக்க உங்கள் மனைவியின் பெயரில் ஒரு சொத்தை வாங்கலாம் அல்லது சொத்தின் இணை உரிமையாளர்களாக மனைவியின் பெயரை சேர்த்து கொள்ளலாம்.
முத்திரை கட்டணம்
ஒரு சொத்தை புதிதாக வாங்கும் போது, அதற்கான செலவுகளும் அதிகளவில் இருக்கும். அதில் முத்திரை கட்டணமும் ஒன்று. சொத்தை பதிவு செய்யும் போது முத்திரைக் கட்டணத்திற்கு அதிக செலவு ஏற்படுகிறது. ஆனால் பல மாநிலங்களில், ஆண்கள் பெயரில் சொத்து வாங்குவதை விட பெண்களின் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரைக் கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் உண்டு. பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் மொத்த தொகையில் 2 முதல் 3 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தினால் போதும். உங்கள் சொத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில், இது உங்களுக்கு மிகப்பெரிய சேமிப்பாகும்.
வீட்டுக் கடன்
வீட்டுக் கடனை உங்கள் மனைவி பெயரில் வாங்கினால் குறைந்த வட்டியில் வீட்டுக் கடனை பெறலாம். இது உங்கள் மனைவியை பொருளாதார ரீதியாக வலிமையாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் பணத்தையும் சேமிக்கிறது. பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆண்களுக்குப் பதிலாக பெண்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன. PMAY இன் கீழ் வீட்டுக் கடன் கிடைப்பது 20 வருட காலத்திற்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 6.5% மானியத்தைப் பெறுவதை உறுதி செய்யும்.
வரி சேமிப்பு
உங்கள் மனைவி பெயரில் சொத்து வாங்கினால் உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்திலிருந்து பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளைப் பெறலாம். நீங்கள் இருவரும் சொத்தில் சம உரிமையாளராக இருந்தால், பிரிவு 80C கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு ரூ. 2 லட்சம் வரை விலக்கு கோரலாம். வீடு உங்கள் மனைவியின் பெயரில் மட்டுமே இருந்தால் மற்றும் அவரது பெயரில் வாங்கப்படும் முதல் சொத்து இதுவாக இருந்தால், பிரிவு 80EE இன் கீழ், அவர் கூடுதலாக வீட்டுக் கடனில் திருப்பிச் செலுத்தும் அசல் தொகைக்கு ரூ. 50,000 மானியம் பெறலாம்.
மேலும் படிக்க | சம்மரில் கூந்தல் கொத்து கொத்தாக கொட்டுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ