நாம் மேற்கொள்ளும் பயணம் வெற்றி பெற எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?

இயல்பாக நாம் மேற்கொள்ளும் முக்கியமான பயணம் வெற்றி பெற எந்தக் கடவுளை நாம் வணங்க வேண்டும்?

Last Updated : Dec 14, 2020, 06:27 AM IST
நாம் மேற்கொள்ளும் பயணம் வெற்றி பெற எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? title=

இயல்பாக நாம் மேற்கொள்ளும் முக்கியமான பயணம் வெற்றி பெற எந்தக் கடவுளை நாம் வணங்க வேண்டும்?

பயணம் பொதுவாக மூன்று வகைப்படும் - தரைவழிப் பயணம் (Train) (இரயில் அல்லது சாலை மார்க்கம்), கடல்வழி (படகு, கப்பல்), ஆகாய மார்க்கம் (விமானம்-Flight). இவற்றில் தரைவழிப் பயணத்தின் மீது தனது ஆதிக்கத்தினை செலுத்தும் கிரகம் செவ்வாய். ஆகவே செவ்வாய்க்கு உரிய தேவதையான சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கி தரைவழிப் பயணத்தை துவங்குவது நன்மை தரும். தற்காலத்தில் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியில், பாதாள மார்க்கத்தில் தங்களது ஆராய்ச்சியினை மேற்கொள்கிறார்கள். இவர்கள் வாராஹி அன்னையை வணங்கி அதன்பின் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்வது வெற்றி தரும்.

நீர்வழிப் பயணத்தின் மீது தனது ஆதிக்கத்தினை செலுத்தும் கோள் சந்திரன். நீர்வழிப் பயணத்திலும் இரண்டு உட்பிரிவுகள் உண்டு. நீரின் மேல் செல்லும் படகு, கப்பல் முதலான பயணத்திற்கு சந்திரனுக்கு உரிய தேவதையான கௌரி (Gowri) என்று அழைக்கப்படும் அம்பிகையையும், நீருக்குள் மூழ்கி செல்லும் நீர்மூழ்கி கப்பல் பயணத்திற்கு மச்சாவதாரம் கொண்ட பெருமாளையும் வணங்குவது நல்லது. ஆகாய மார்க்கத்தின் மீது தனது ஆதிக்கத்தினை செலுத்தும் கோள் புதன்.

ALSO READ | தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்பார்களே அது ஏன்?​

விமான வழிப் பயணம் மேற்கொள்ளும்போது ஆஞ்சநேய ஸ்வாமியையும், ஆராய்ச்சி ரீதியிலான விண்வெளிப் பயணத்திற்கு நடராஜப் பெருமானையும் வழிபடுவது நல்லது. இறைசக்தி என்பது ஒன்றுதான். எங்கே, எந்த அளவிலான உந்துதிறன் தேவைப்படுகிறதோ, அந்த அளவிலான உந்து திறனை பயன்படுத்தினால் மட்டுமே செயல் வெற்றி பெறும் என்பது இயற்பியலின் அடிப்படை விதி. அதேபோன்று இடத்திற்கு தகுந்தாற்போல் நாமும் இறைசக்தியை பிரார்த்தனை செய்துகொண்டால் செயலில் வெற்றி காண முடியும்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News