நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படைக்கு ஏன் அவசியம்? அதன் பயன் என்ன? விவரம்

ஒவ்வொரு நாட்டின் கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்கள் ஏன் மிக முக்கியமாக பங்காக கருதப்படுகிறது. இதனால் என்ன பயன்? இந்தியாவிடம் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் என்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் கீழே பதில் கூறப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2018, 05:11 PM IST
நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படைக்கு ஏன் அவசியம்? அதன் பயன் என்ன? விவரம் title=
ஒவ்வொரு நாட்டின் கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்கள் ஏன் மிக முக்கியமாக பங்காக கருதப்படுகிறது. இதனால் என்ன பயன்? இந்தியாவிடம் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் என்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் கீழே பதில் கூறப்பட்டு உள்ளது.
 
இதுக்குறித்து இந்திய இராணுவச்செய்திகளில் கூறப்பட்டதாவது:-
 
கடற்படைகள் வரலாற்றில் நீர்மூழ்கிகளின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய வரலாற்றில் உலகில் உள்ள அனைத்து கடற்படை கொண்ட நாடுகளும் தங்கள் படையில் நீர்மூழ்கிகளை அதிக அளவில் இணைக்க தொடங்கி விட்டனர். காரணம் நாசி படையினர் நீர்மூழ்களின் திறனை உணர்ந்து அதை கொடூர போர் இயந்திரமாக உருவாக்கி பல வெற்றிகளை குவித்திருந்தனர்.
 
இன்று பல வகை நீர்மூழ்கிகள் பல நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவும் நீர்மூழ்கிகளை தனது கடற்படையில் இணைத்து வருகிறது. சிறிய நீர்மூழ்கிகள் முதல் பெரிய அரிகந்த் நீர்மூழ்கிகள் வரை இதில் அடங்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய கடற்படையில் மீண்டும் நவீன நீர்மூழ்கிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதில் கல்வாரி, அரிகந்த், அரிகத் போன்றவை அடக்கம்.
 
ஏன்  நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு நவீன கடற்படைக்கு மிக முக்கியமாக படுகிறது? அதற்கு இந்த சுவாரசிய சம்பவத்தை கூறுகிறேன்.
 
அமெரிக்காவின் 7வது கடற்படை தாக்கும் குழுவை ஒரு சிறிய 1600 டன் நீர்மூழ்கி தோற்கடித்த கதை தான் இது.
 
அமெரிக்க கடற்படையின் 7வது போர்க்குழு நிமிட்ஸ் வகை விமானம் தாங்கி கப்பல். உண்மையில் இது பல பில்லியன் மதிப்புள்ள நகரும் விமானம் தளம் தான். ஒரு பெரும் தீவு என்றே கொள்ளலாம். உலகின் இரண்டாம் பெரிய விமானப் படையும் அமெரிக்காவிடம் தான் உள்ளது. ஆம் அமெரிக்க கடற்படை தான் அது.
 
2005 ஆம் ஆண்டு கடற்பகுதியில் ஒரு போர்பயிற்சி நடக்கிறது. அதில் கலந்து கொண்ட படைகளுள் ஸ்வீடன் படைகளும் அடக்கம். இதில் அமெரிக்க போர்க்கப்பல் குழுவை எப்படி அழிக்க வேண்டும் என பயிற்ச்சி தரப்பட்டது. பயிற்சிக்காகக் கூட அமெரிக்க போர்க்குழுவை அழிக்க முடியாது என நினைத்து கொண்டிருக்க அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது ஸ்வீடனின் கோட்லான்ட் வகை நீர்மூழ்கி கப்பல்.
 
பயிற்ச்சி நடந்தது. அப்பொழுது போர்க்கப்பல் குழு வந்து கொண்டிருந்த வழியில் தண்ணீருக்குள் லாவகமாக புகுந்து அந்த பக்கம் சென்றுவிட்டது. இதை அமெரிக்க போர்க்கப்பல் குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த பயிற்சியில் விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல் குழுவில் பாதி கப்பல்களை கோட்லான்ட் நீர்மூழ்கி அழித்திருந்தது. அமெரிக்க கடற்படைக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை தவிர்த்து அவர்கள் ஆபத்தையும் உணர்ந்தனர்.
 
யுஎஸ்எஸ் ரோனால்டு ரீகன் தான் அந்த போர்க்கப்பல் குழுவை வழிநடத்தி சென்றது. 4.5 பில்லியன் டாலர்கள் பெருமான கப்பல் மற்றும் 90 விமானங்களை தாங்கி செல்ல கூடியது அந்த கப்பல். வெறும் 100 மில்லியன் மதிப்புள்ள 1600 டன்கள் எடையுடைய நீர்மூழ்கி இதை சாதித்திருந்தது.
 
அதன் பிறகு தனது நீர்மூழ்கி கண்டுபிடிக்கும் அமைப்புகளை வலுப்படுத்த கோட்லான்ட் நீர்மூழ்கிகளை ஸ்வீடனிடம் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பெற்று அதை ஆராய்ந்தது.
 
அந்த நீர்மூழ்கி சில அமைப்புகளை பெற்றிருந்தது. ஏர் இன்டிபென்டன் புரோபல்சன் மற்றும் ஸ்டெர்லிங் சைக்கிள் என்ஜின். இவை முறையே நீர்மூழ்கியை ஆழத்தில் நீண்ட நேரம் இருக்கவும், என்ஜின் சத்தம் மிக குறைவாக இயங்கவும் வழிவகுத்தது.
 
இது மட்டுமல்ல 2015-ல் நடந்த பயிற்சில் பிரான்சின் சாபிர் வகை நீர்மூழ்கி இதே காரியத்தை சாதித்தது. ஆனால் இந்த முறை 12வது போர்க்கப்பல் குழுவின் தியோடர் ரூஸ்வெல்டு விமானம் தாங்கி கப்பல்.
 
இதன்மூலம் ஒன்று தெளிவாக புரிகிறது, இயந்திரம் முக்கியமல்ல, அந்த இயந்திரத்தை யார் இயக்குகிறார்கள் என்பதே முக்கியம்.
 
(செய்தி:இந்திய இராணுவச் செய்திகள்)

Trending News