நகைகள் அல்ல, முககவசங்கள் தாம் இப்போது நாம் வெளியில் செல்லும்போது பயன்படுத்தக்கூடிய பொருளாகிவிட்டன. வெளியே செல்லும் போது முக கவசங்கள்அணியாமல் இருப்பது விரைவில் உங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடும்.
நம்வாழ்வில்பெரும்மாற்றங்கள்நிகழ்ந்திருப்பதால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பொது இடத்தில் இருக்கும்போதெல்லாம் நம் முகங்களை மறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைனிலும் கடைகளிலும் பல்வேறு வகையான முககவசங்கள் உள்ளன. உண்மையில், இப்போது உங்கள் அலங்காரத்துடன் பொருந்தக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பங்கள் உள்ளன. ஆனால், இது முக கவசங்கள் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோலாக இருக்கக்கூடாது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, துணி முககவசங்கள் அல்லது பிற பிபிஇ அணிந்துகொன்டு வெளியில் செல்லும் போது கட்டாயமாகும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் முககவசங்களின் வகையை இது குறிப்பிடவில்லை. இருப்பினும், மற்ற துணிகளால் செய்யப்பட்ட முககவசங்களை விட செப்பு முககவசங்கள் கொரோனா வைரஸில்இருந்துஉங்களைப் பாதுகாப்பதில் சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தாமிரம் ஆண்டிமைக்ரோபியல் என்றும், இந்த உலோகத்துடன் தொடர்பு கொண்ட சில மணி நேரங்களுக்குள் பெரும்பாலான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் இறக்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்மையில், சில நோய்க்கிருமிகள் செப்பு மேற்பரப்பில் சில நிமிடங்களில் இறக்கின்றன. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தாமிரத்துடன் தொடர்பு கொண்ட நான்கு மணி நேரத்திற்குள் வைரஸ் செயலற்றதாகிவிடும். வைரஸைக் கொல்வதில் இந்த உலோகத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, தாமிரத்தைக் கொண்டிருக்கும் முககவசங்களை தயாரிப்பது புத்திசாலித்தனமான முடிவு.
பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே சாதாரண துணி முககவசங்களை ஒத்த செப்பு முககவசங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன, இதனால் கூடுதல் நன்மை உண்டு. கப்ரோன் என்ற செப்பு அடிப்படையிலான ஆண்டிமைக்ரோபியல் தொழில்நுட்ப நிறுவனம் ஏற்கனவே வயா சிட்டிங் உடன் இணைந்து செப்பு உட்செலுத்தப்பட்ட முககவசங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த முககவசங்களுக்கு EPA இன் ஒப்புதல் கிடைத்துள்ளது. COVID-19 நோய்த்தொற்றைத் தடுக்க செப்பு முகமூடிகள் உங்களுக்கு உதவக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வைரஸ் நோய் இதுவரை உலகளவில் மொத்தம் 352117 பேரை பலிகொண்டுள்ளது. மற்றும் உலகளவில் 5637991 நபர்களை பாதித்துள்ளது.
ஆகவே நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கமுடியுமோ அவ்வளவு எச்சரிக்கையாக இருங்கள் மேலும்பாதுகாப்புடன் இருங்கள்!
மொழியாக்கம் - நிவாஸ்