ஒருவர் தவறு செய்தால் குடும்பத்தை தண்டிப்பதா?... ஹோம் பட நடிகர் இந்திரன்ஸ் ஆதங்கம்

தனக்கு விருது கொடுக்காதது குறித்து கேரள நடிகர் இந்திரன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 29, 2022, 02:57 PM IST
  • கேரள திரைப்பட விருதில் நிராகரிக்கப்பட்ட ஹோம்
  • இந்திரன்ஸுக்கு விருது இல்லை
  • ஹோம் பட தயாரிப்பாளர் விஜய் பாபு மீது பாலியல் புகார்
 ஒருவர் தவறு செய்தால் குடும்பத்தை தண்டிப்பதா?... ஹோம் பட நடிகர் இந்திரன்ஸ் ஆதங்கம் title=

ரோஜின் தாமஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஹோம். ஓலிவர் என்ற கதாபாத்திரத்தில் இந்திரன்ஸ் நடித்திருந்தார். தொழில்நுட்ப உலகத்துடன் இணைய முடியாமல் தவிக்கும் தந்தை கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார்.

அவரது நடிப்பை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். மேலும் அவருக்கு நடிப்பு என்பது வெகு இயல்பாகவே வருகிறது. நடிக்கிறார் என்று சொல்ல முடியாத அளவு படத்தில் தோன்றியிருக்கிறார் எனவும் கூறினர். அதுமட்டுமின்றி அவருக்கு பல்வேறு விருதுகள் காத்திருப்பதாக ஆரூடமும் கூறப்பட்டது.

Indrans

இந்நிலையில், கேரளாவில் 52ஆவது திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த விருதுகள் பட்டியலை கேரள கலாசாரத் துறை அமைச்சர் சஜி செரியன் வெளியிட்டார். 

இந்த விருதுகள் பட்டியலில் மலையாளத்தில் வெளியான, 'ஃப்ரீடம் ஃபைட்', 'மதுரம்', 'நயட்டு' உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் 'ஆர்க்கரியாம்' படத்தில் முதியவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிஜு மேனனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | அடுத்தடுத்து 3 நடிகைகள் தற்கொலை! கொல்கத்தாவில் தொடரும் மர்மங்கள்

சிறந்த நடிகைக்கான விருது தமிழ், மலையாள நடிகை ரேவதிக்கு (பூதகாலம்) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படமாக 'ஆவாஸவ்யூகம்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் சிறந்த வெகுஜனப் படமாக வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரனவ் மோகன்லால் நடித்த 'ஹ்ருதயம்' தேர்வாகியுள்ளது.

Vijay Babu

ஆனால் பல விருதுகள் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஹோம் படமும், அதில் நடித்த இந்திரன்ஸும் விருது பட்டியலில் இல்லை. ஹோம் படத்தை தயாரித்த விஜய் பாபு பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருப்பதால் ஹோம் படம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்திரன்ஸுக்கு நிச்சயம் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு விருது கொடுக்கப்படாதது குறித்து நடிகர் இந்திரன்ஸ் கூறுகையில், “ஹோம் படத்தை பார்த்த அனைவரும் சிறப்பாக இருப்பதாக கூறி எனது நடிப்பை வெகுவாக பாராட்டினர்.

மேலும் படிக்க | நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்... மூன்று பேருக்கு மட்டும்தான் அழைப்பா?

நடுவர்கள் படத்தை பார்த்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால், அதற்காக மொத்தக் குடும்பமும் தண்டிக்கப்பட வேண்டுமா என்ன?” என்று கேள்வி எழுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News